அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் இளைஞன் பலி

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட போலவத்த தும்மோதர வீதியின் கிரிமெட்டியாவ பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற வீதிவிபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். லுணுவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 தும்மோதர பகுதியிலிருந்து போலவத்த பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதே திசையில் பயணித்த லொறி ஒன்றை முந்திசெல்ல முற்பட்ட போது குறித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

 இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பின் பக்கமாக இருந்து பயணித்த இளம் யுவதி வீதியின் நடுவே வீழ்ந்தமையால், பயணித்த லொறி யுவதி மீது ஏறியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 19 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் இளைஞன் பலி Reviewed by Author on February 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.