அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.

மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம்(17) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேசக்கரம் பிரஜைகள் குழு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள்,பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 

 வட மாகாணத்தில் மக்களைப் பாதிக்கும் வள சுரண்டல்கள்,காணி அபகரிப்புக்கள்,கடற்பரப்புக்களை தனியார் வசப்படுத்தல் போன்ற செயற்பாடுகளைக் கண்டித்தும்,சமத்துவத்தையும் நிலை நிறுத்தக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. -போராட்டத்தை தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது










மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு. Reviewed by Author on January 17, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.