மன்னாரில் 525 ஜெலட்னைட் (டைனமைட்) குச்சிகள் மற்றும் 354 டெட்டனேட்டருடன் ஒருவர் கைது.
மன்னார் புதிய மூர்வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஒரு தொகுதி ஜெலட்னைட் (டைனமைட்) மற்றும் டெட்டனேட்டர் குச்சிகளுடனும் இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை நபர் ஒருவர் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 525 ஜெலட்னைட் (டைனமைட்) மற்றும் 354 டெட்டனேட்டர் குச்சிகள் உட்பட இணைப்பு நூல் 10 றோலும் மீட்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைய மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பால வின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் கேரத்தின் ஆலோசனையின் கீழ் ரத்ணமணல தலை மையினரான குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே குருநாகல் பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் ஜெலட்னைட் (டைனமைட்) குச்சிகளையும் நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன். விசாரணையின் பின் மீட்கப்பட்ட ஜெலட்னைட் (டைனமைட்)மற்றும் டெட்டனேட்டர் குச்சிகள் உட்பட கைது செய்யப்பட்ட நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட உள்ளனர்.
மன்னாரில் 525 ஜெலட்னைட் (டைனமைட்) குச்சிகள் மற்றும் 354 டெட்டனேட்டருடன் ஒருவர் கைது.
Reviewed by NEWMANNAR
on
December 19, 2023
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 19, 2023
Rating:











No comments:
Post a Comment