அண்மைய செய்திகள்

recent
-

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றார் மோடி

 ஆசிய மற்றும் உலக அரசியலில் மற்றொரு தனித்துவமான அத்தியாயத்தை ஆரம்பித்து இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றகவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா, தலைநகர் டெல்லியில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிராந்திய அரச தலைவர்கள் குழுவும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்திய பொதுத் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் கடந்த 4 ஆம் திகதி வெளியிடப்பட்டன.

642 மில்லியன் மக்கள் வாக்களித்த இந்தத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.

அதாவது இந்திய நாடாளுமன்றத்தின் 543 ஆசனங்களில் 293 ஆசனங்களை கைப்பற்றி அந்த கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.

இந்திய வரலாற்றில் தொடர்ந்து 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க மக்கள் ஆணை பெற்ற  இரண்டாவது பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மட்டுமே இதற்கு முன்னர் தொடர்ந்து மூன்று முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று காலை ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடத்திற்கு சென்றார்.

அதன்பின் தேசிய மாவீரர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

மூன்றாவது முறையாக மோடியின் பதவியேற்பு விழா தலைநகர் டெல்லியில் இன்று இடம்பெறவுள்ள நிலையில் பல பிராந்திய நாடுகளின்  அரச தலைவர்கள் உட்பட ஒன்பதாயிரம் பிரமுகர்கள் அதில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றார் மோடி Reviewed by Author on June 09, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.