பாடையில் ஏற்றப்பட்ட பட்டங்கள்- யாழ். வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்!
பல்கலைக்கழகத்தினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற பட்டத்தை பிரேதப்பெட்டியில் ஏற்றி, வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக இன்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது?, படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா?, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததக்கு கூலிதொழிலா கடைசி வரைக்கும்?, படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா?, படித்தும் பரதேசிகளாக திரிவதா?” என பல்வேறுப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
June 09, 2024
Rating:


No comments:
Post a Comment