கிளிநொச்சியில் புதையல் தோண்டிய நால்வர் கைது
கிளிநொச்சி மின்சார சபை சுற்றுலா விடுதி பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (11) மதியம் 12:45 மணியளவில் குறித்த பகுதியில் புதையல் தோண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கிளிநொச்சி அறிவியல் நகர் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் அநுராதபுரம் மின்சார சபையில் பணியாற்றுபவர்கள் என கூறப்படுகின்றது.
அவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் புதையல் தோண்டிய நால்வர் கைது
Reviewed by Vijithan
on
January 12, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 12, 2026
Rating:


No comments:
Post a Comment