மன்னார் கோந்தை பிட்டி பகுதியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 'கடற்கரையோரங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9)காலை கண்டல் தாவரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டது.
மன்னார் உப்புக்குளம் அல் -அஸ்ஹர் மீனவ கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும் வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளருமான N.M.ஆலம் தலைமையில் பொது மக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் மன்னார் நகர் பிரதேச செயலாளர் M.பிரதீப் மற்றும் கடற்றொழில் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி பவனிதி ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு மரம் நடுகை யை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் உப்புக்குளம் பள்ளிவாசல் இமாம் , மன்னார் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள்,மீனவர்கள்,இளைஞர்கள் சிறுவர்கள்,மாதர் அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகள்,சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள், போன்றவர்கள் கலந்து கொண்டு கண்டல் தாவரங்களை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது
.jpg)
No comments:
Post a Comment