சீரற்ற காலநிலை காரணமாக 7500 ஹெக்டயர் விவசாய செய்கை அழிவு
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாகவும் அதிக மழைகாரணமாகவும் 7603 ஹெட்டேயர் விவசாய செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பைகடவை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட 1100 ஹெக்டெயர் விவசாய நிலங்களும் மாந்தை பகுதியில் 1168 நானாட்டான் 768 ஹெக்டேயருமாக ஒட்டு மொத்தமாக 7603 ஹெக்டேயர் விவசாய செய்கை அழிவடைந்துள்ளது
இம்முறை மன்னார் மாவட்டத்தில் காலபோக செய்கைக்கு என 11776 ஹெக்டேயர் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 4173 ஹெட்டேயர் விவசாய செய்கை மாத்திரமே தற்போது பகுதி அளவில் காப்பாற்றப்பட்டுள்ளது
இந்த நிலையில் இம்முறை விவசாய செய்கைக்காக பல விவசாயிகள் அரச மற்றும் தனியார் வங்கிகளிலும்,கிராம மட்ட அமைப்புக்களிடமும் கடன்களை பெற்றுள்ள நிலையில் அவற்றை மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் தள்ளுபடி செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Reviewed by Author
on
December 03, 2024
Rating:




No comments:
Post a Comment