அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் மனிதாபிமானற்ற ரீதியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்

 யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் மனிதாபிமானற்ற முறையில் அந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,


மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்றினை பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.


குறித்த சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி செல்லவில்லை.


அதனை அடுத்து அவரது வீட்டுக்கு துப்பாக்கிகளுடன் சென்ற பொலிஸார் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தும் ஏன் வரவில்லை என கேட்டுள்ளனர்.


அதற்கு அவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையால், தான் தற்போது வேட்பாளர் இல்லை எனும் காரணத்தால் சந்திப்பு வரவில்லை என பொலிஸாருக்கு பதில் அளித்துள்ளார்.


பொலிஸார் அழைத்தால் பொலிஸ் நிலையம் வர வேண்டும் என அவரை அச்சுறுத்தி தர்க்கப்பட்டுள்ளனர்.


அதனை அவதானித்த சற்குணாதேவியின் மகன், அம்மாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பொலிஸாரிடம் கோரிய போது , பொலிஸார் மகனுடன் முரண்பட்டுக்கொண்டனர்.


பின்னர் மேலங்கி இல்லாது சாரத்துடன் குறித்த இளைஞனை கைது செய்து , சாரத்தில் பிடித்து இழுத்து சென்ற போது சாரம் அவிழந்தையும் கருத்தில் எடுக்காது, கையில் துப்பாக்கியுடன் மனிதாபிமானமின்றி இளைஞனை பொலிஸ் நிலையம் இழுத்து சென்றுள்ளனர்.


மேலங்கி இன்றி இளைஞனை வீதியில் சாரம் அவிழும் நிலையில் , சாரத்தை பிடித்து பொலிஸார் இழுத்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள நிலையில் பல தரப்பினரும் பொலிஸாரின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்





 

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் மனிதாபிமானற்ற ரீதியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் Reviewed by Vijithan on April 23, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.