அண்மைய செய்திகள்

recent
-

நிலநடுக்கம் தொடர்பில் இலங்கைக்கு எச்சரிக்கை

 சமீபத்திய நிலநடுக்கங்கள் நாட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், நிலநடுக்கங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது.


சுமத்ரா தீவுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் தாக்கம் இந்நாட்டில் சுனாமி போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று பணியகம் தெரிவித்துள்ளது.


உலகளாவிய நில அதிர்வு நிகழ்வுகளை கண்காணித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு நிலநடுக்கத்திற்கும் பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், சமீபத்தில் மின்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதன் காரணமாக அந்நாட்டிற்கு கடுமையான சேதம் ஏற்பட்டது.


அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,000ஐ கடந்து விட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


இதற்கிடையில், ஜப்பானினும் நிலநடுக்க அபாயம் இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8-9 ஆக இருக்கலாம் என்றும், 300,000 க்கும் மேற்பட்டோர் பலியாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.




நிலநடுக்கம் தொடர்பில் இலங்கைக்கு எச்சரிக்கை Reviewed by Vijithan on April 01, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.