சிறப்பாக நடைபெற்ற மன் கள்ளியடி அ. த. க பாடசாலையின் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா
சிறப்பாக நடைபெற்ற மன் கள்ளியடி அ. த. க பாடசாலையின் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா
மாந்தை மேற்கு மடு கல்வி வலயத்திற்கு உற்பட்ட மன் கள்ளியடி அ. த. க பாடசாலையின் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா 24.04.2025 இன்று வியாழக்கிழமை காலை 10:30 மணி அளவில் பாடசாலை மண்டபத்திலே பாடசாலையின் அதிபர் திரு. இ. லோறன்ஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்று உள்ளது
குறித்த மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வின் பிரதம விருந்தினராக கள்ளியடி மக்கள் அமைப்பு இணைப்பாளர் திரு. முத்துலிங்கம் விஜிதன் ( லண்டன் ) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.மேலும் அயல் பாடசாலைகளான வெள்ளாங்குளம் அதிபர் திரு.சாந்தரூபன், தேவன்பிட்டி றோ.க.த.ம.வி பாடசாலை அதிபர் திரு.விஜிதரன், கணேசபுரம் ஆரம்ப பாடசாலை அதிபர் திரு.தயாபரன் மற்றும் Open நிறுவன ஊழியர் திருமதி.யான்சி அவர்கள் கலந்து சிறப்பித்தனர் அவர்களோடு இணைந்து பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment