மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்கமறியல்
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் அவரை கைது செய்வதற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில், அவரை மே 26 வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, வழக்கு விசாரணைகளை இன்று (19) முன்னெடுக்குமாறு சட்டத்தரணிகள் ஊடாக அவர் சீராக்கல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்கமறியல்
Reviewed by Vijithan
on
May 19, 2025
Rating:

No comments:
Post a Comment