சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன்
தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.
தான் இந்த நினைவு நிகழ்வில் கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பங்கேற்றதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"இன்று நாங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக வந்தோம். ஆம், சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம். யாரையும் பிடிப்பதற்காக அல்ல. நாட்டைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்தோம். எதிர்காலத்தில் இவை மீண்டும் நடைபெறுமா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியாது. அது வரும் அரசாங்கங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். யுத்தம் என்பது ஒரு துயரச் சம்பவம். ஆனால், எங்கள் இராணுவம் வெற்றி பெற்றது. யுத்தத்தில் ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டும் தானே.
நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி இதன்போது எழுப்பியிருந்தார்.
மஹிந்த - தேசிய பாதுகாப்பு? அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டைப் பாதுகாக்க வேண்டும்..."
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன்
Reviewed by Vijithan
on
May 20, 2025
Rating:

No comments:
Post a Comment