அண்மைய செய்திகள்

recent
-

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு சீனா கண்டனம்

 ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலை "வன்மையாகக் கண்டிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 


அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. 

இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் பதட்டங்களை அதிகரிக்கும் என்று சீனா குறிப்பிட்டுள்ளது. 

மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும், குறிப்பாக இஸ்ரேல், விரைவில் ஒரு போர்நிறுத்தத்தை எட்ட வேண்டும் என்று சீனா அழைப்பு விடுத்துள்ளது. 

"சர்வதேச மோதல்களைத் தீர்க்க ஆயுதப் படை சரியான வழி அல்ல" என்று சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் கூறியதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சு வௌியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு சீனா கண்டனம் Reviewed by Vijithan on June 22, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.