முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 26 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
அதே நாளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்,
மறுநாள், வைத்திய பரிந்துரைகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதியை கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (29) வைத்தியசாலையில் இருந்து வௌியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை!
Reviewed by Vijithan
on
August 30, 2025
Rating:
Reviewed by Vijithan
on
August 30, 2025
Rating:


No comments:
Post a Comment