டெங்கு நோயினால் 12 பேர் பலி
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப் பிரிவிலும் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், டெங்கு நோய் காரணமாக இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
எவருக்கேனும் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலவுமாயின், உடனடியாக வைத்தியரை அணுகி அது டெங்கு நோயா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர அறிவுறுத்தியுள்ளார்.
வைத்தியரைச் சந்திக்கும் வரை காய்ச்சலுக்கு பெரசிட்டமோல் தவிர்ந்த வேறு மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என்றும், கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பைப் பெற தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயினால் 12 பேர் பலி
Reviewed by Vijithan
on
May 02, 2026
Rating:
Reviewed by Vijithan
on
May 02, 2026
Rating:


No comments:
Post a Comment