அண்மைய செய்திகள்

recent
-

தமிழரசு கட்சியின் மே தின கூட்டம்; கொடியால் வெடித்த சர்ச்சை

  இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டம் மாங்குளத்தில் நேற்றையதினம் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் கலந்துகொண்டோர் கைகளில் இருந்த கொடி சமூக ஆர்வலர்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.


அதாவது, ஈபிடிபி கட்சியின் கொடியினை ஒத்த வர்ணங்களே இலங்கை தமிழரசு கட்சியின் கொடியிலும் காணப்படுகிறது.



 நிறங்களின் ஒழுங்கில் மாற்றம் 


ஆனால் நிறங்களின் ஒழுங்கில் மாற்றம் இருக்கிறது. ஈபிடிபி கட்சியின் கொடியானது முதலாவதாக பச்சை வர்ணத்தையும், இரண்டாவதாக சிவப்பு வர்ணத்தையும், மூன்றாவதாக மஞ்சள் வர்ணத்தையும் கொண்டது.



இலங்கை தமிழரசு கட்சியின் கொடியின் நிறங்களின் ஒழுங்கமைப்பானது முதலாவதாக மஞ்சள் வர்ணத்தையும், இரண்டாவதாக சிவப்பு வர்ணத்தையும், மூன்றாவதாக பச்சை வர்ணத்தையும் கொண்டதாக காணப்படும்.


திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு சரியான ஒழுங்கிலேயே வர்ணங்கள் அமைந்திருந்தன.


ஆனால் மாங்குளத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டத்தில் ஈபிடிபியின் கட்சி கொடியின் வர்ண ஒழுங்கினை ஒத்த ஒழுங்கே காணப்பட்டது.



நாடுகளின் கொடிகளிலோ, கட்சிகளின் கொடிகளிலோ, வேறு அமைப்புக்களின் கொடிகளிலோ வர்ணங்களின் ஒழுங்கமைப்பை மாற்றும் முறை காணப்படுவதில்லை.


இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சி ஒழுங்கினை மாற்றி கட்சி கொடியை அமைத்தமை சரியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





தமிழரசு கட்சியின் மே தின கூட்டம்; கொடியால் வெடித்த சர்ச்சை Reviewed by Vijithan on May 02, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.