அண்மைய செய்திகள்

recent
-

மாலைத்தீவு ஜனாதிபதியின் வருகையையொட்டி விசேட போக்குவரத்துத் திட்டம்

 மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, விசேட போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இந்த போக்குவரத்துத் திட்டம் நாளை (03) முதல் வரும் 06-ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நாளை மாலை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக வீதி ஊடாக கொழும்பிற்கு வருகை தரவுள்ளார்.


அந்த நேரத்தில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதால், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





மாலைத்தீவு ஜனாதிபதியின் வருகையையொட்டி விசேட போக்குவரத்துத் திட்டம் Reviewed by Vijithan on May 02, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.