அண்மைய செய்திகள்

recent
-

ஹபராதுவவில் மின்னல் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு

 நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.

 

இந்த விபத்தில் ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

 

பாதிக்கப்பட்ட இரு பெண்களும் அப்பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர்கள் எனவும், அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்த போதே மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

விபத்தில் காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்







ஹபராதுவவில் மின்னல் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு Reviewed by Vijithan on May 03, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.