அண்மைய செய்திகள்

recent
-

நடைமுறைக்கு வரும் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 08, 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, 14 மாவட்டங்களுக்குட்பட்ட 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

இதற்காக பொலிஸார் மற்றும் முப்படைகளின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படும் என தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

டெங்கு பரவும் அதிக அபாயம் உள்ள பகுதிகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. 

நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.




நடைமுறைக்கு வரும் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் Reviewed by Vijithan on June 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.