கிரிஷ் வழக்கில் வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்திய சாட்சிகள் இருவருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் கீழ், வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் நடைமுறைக்கு அமைய அழைப்பாணை விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
குறித்த இரண்டு சாட்சிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொடவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிஷ் வழக்கில் வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை
Reviewed by Vijithan
on
June 25, 2026
Rating:
Reviewed by Vijithan
on
June 25, 2026
Rating:


No comments:
Post a Comment