அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஸ்தாபக தலைவர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள், பொது மக்களின் 36 வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

 ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள்,பொது மக்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தின தியாகிகள் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை 5.30 மணியளவில் மன்னாரில் நினைவு கூறப்பட்டது.


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F)  மன்னார்   மாவட்ட அலுவலகத்தில்  மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது தோழர் பத்மநாபா மற்றும் உயிரிழந்த போராளிகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


குறித்த நினைவேந்தல் நிகழ்வில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,  ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் உறுப்பினர்கள்,மகளிர் அணியினர், உயிரிழந்த போராளிகளின் உறவுகள் என பலர் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.






மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஸ்தாபக தலைவர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள், பொது மக்களின் 36 வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு. Reviewed by Vijithan on June 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.