மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து ஒருவர் சம்பவ இடத்தில் பலி
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து ஒருவர் சம்பவ இடத்தில் பலி
விபத்தை ஏற்படுத்திய பேருந்து மற்றும் சாரதியை காப்பாற்றி அழைத்துச் சென்ற இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(19) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் மக்கள் மீது கடுமையாக தாக்கி விபத்தை ஏற்படுத்திய பேருந்தையும்,அதன் சாரதியையும் காப்பாற்றிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு வைத்தியசாலையில் இருந்து சற்று தொலைவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
சிறிய ரக பேருந்து --மன்னார் யாழ் பிரதான வீதியூடாக பயணித்த போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது குறித்த பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது,அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற பகுதி அடம்பன் பொலிஸ் பிரிவுக் குற்பட்டதாக காணப்பட்ட போதும்,இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளாது உயிரிழந்த மற்றும்,படு காயமடைந்தவர்களின் உறவினர்கள் அவ்விடத்தில் கூடிய போது அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதோடு,விபத்தை ஏற்படுத்திய தனியார் பேரூந்தையும்,அதன் சாரதியையும் மீட்டு இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்ப இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
-மேலும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் இருந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவரின் உறவுகள் அவ்விடத்தில் கத்திக் கொண்டிருந்த போது தாக்கியதாகவும் தெரிவித்தனர்.
-இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இலுப்பைக்கடவை பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட வில்லை எனவும்,இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவில் மணல் மண் கடத்தல் காரர்களிடம் பாரிய அளவில் லஞ்சம் பெற்று மணல் வியாபரத்திற்கு அனுமதியை இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க வழங்கி வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment