சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாக பின் பகுதியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.
இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை(26) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் உயிலங்குளம் முதலை குத்தி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான அந்தோனி தெய்வீகன்(வயது-45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பைக் கடவை பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர்.
-பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பா.பிரபா நந்தன் சடலத்தை பார்வையிட்டதோடு, சடலத்தை மீட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by Author
on
September 26, 2024
Rating:





No comments:
Post a Comment