தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக நான்கு வருடங்களாக பணத்தை செலவழித்து அவதியுறும் மன்னாரைச் சேர்ந்த குடும்பம்....
தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக நான்கு வருடங்களாக பணத்தை செலவழித்து அவதியுறும் மன்னாரைச் சேர்ந்த குடும்பம்....
மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று புகையிரத திணைக்களத்தில் வேலை செய்த தமது தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக கடந்த நான்கு வருடங்களாக அலைந்து திரிந்து பணம் செலவழித்து அவதியுறும் நிலை தொடர்பில் தெரிய வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருகையில் கந்தையா செல்வநாயகம் எனும் நபர் புகையிறத திணைக்களத்தில் பணியாற்றியுள்ளார் இவர் கடந்த 06-06-2020 அன்று உயிரிழந்துள்ளார் அவர் இறப்பதற்கு இரண்டு வருடத்திற்கு முன்பே, இவரது ஓய்வூதியத்தை பெறுவதற்கான முயற்சிகளை அவரும் அவருடைய குடும்பத்தினரும் மேற்கொண்டு இருந்தனர் இருப்பினும் அந்த முயட்சி பயனளிக்கவில்லை பின்பு அவர் இறந்து நான்கு வருடங்கள் ஆகின்ற நிலையில் இன்று வரைக்கும் அவருடைய ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்வதற்காக குறித்த நபரின் மனைவி உட்பட பிள்ளைகள் அனைவரும் முயற்சி செய்து வருகின்றனர் இருப்பினும் நான்கு வருடங்கள் முயற்சி செய்தும் இதுவரையில் இந்த ஓய்வூதிய பணம் கிடைப்பது தொடர்பிலும்எந்தவித முன்னேற்றமும் இல்லை இது தொடர்பில்
அவர்கள் அதிக பணத்தை செலவழித்துள்ளதும் தெரியவந்துள்ளது
இது தொடர்பில் குறித்த நபரின் மகன் தெரிவிக்கையில்
எம் தந்தை இறந்து நான்கு வருடங்களாக அவருடைய ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முயற்சி செய்து வருகின்றோம் இந்த விடயங்களில் அலைந்து திரிந்து எம்முடைய தாய்க்கும் தற்பொழுது உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது நான்கு வருடங்களாக முயற்சி செய்தும் இதுவரையிலும் நமது தாய்க்கு அந்த ஓய்வூதிய பணம் கிடைக்கவில்லை என் தந்தையின் ஓய்வூதியத்திற்கான சகல ஆவணங்களும் எம்மிடம் உள்ளது அவற்றை நாங்கள் உரிய திணைக்களத்திடம் ஒப்படைத்தும் நான்கு வருடங்கள் ஆக எமது தந்தையின்ஓய்வூதியத்திற்கான பணம் இழுவறி நிலையில் உள்ளது நாங்கள் மாறி மாறி அனுராதபுரம் கொழும்பு சென்று துணைக்கல அதிகாரிகளிடம் கலந்துரையாடியும்
எமக்கு சரியான பதில் இதுவரையிலும் கிடைக்கவில்லை ஒவ்வொரு முறையும் நாங்கள் செல்லும் பொழுதுஎம்மிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் தருமாறும் முப்பதாயிரம் ரூபாய் தருமாறும் அவ்வாறு தந்தால் இந்த வேலையை உடனடியாக முடித்து தருவோம் என்று கூறி எம் இடம் இருந்து பணத்தை பெற்று கொள்கிறார்களே தவிர இது தொடர்பில் எமக்கு எந்த ஒரு தீர்வையும் தரவில்லை குறித்த ஒரு ஆவணத்தில் கையொப்பம் பெறுவதற்கு மட்டும் நாங்கள் பத்தாயிரம் ரூபாய் வழங்கியுள்ளோம் தொடர்பில் மன்னாரில் உள்ள இது சார்ந்த அதிகாரிகளிடம் கேட்கும் பொழுதும் தமக்கு எம் தந்தையின் ஓய்வூதியம் தொடர்பான எந்த ஒரு ஆவணமும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று கூறுகிறார்கள் நாங்கள் கிட்டத்தட்ட எங்களுடைய தந்தையின் ஓய்வூதியத்திற்காக மாத்திரம் மூன்று லட்சம் ரூபாவிற்கு மேல் செலவு செய்துள்ளோம் இருப்பினும் நான்கு வருடங்கள் போராடியும் உமக்கு இதுவரையில் தீர்வு கிட்டவில்லை எமது தாய்க்கும் இப்பொழுது உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது எங்களுடைய தந்தையின் ஓய்வூதியம் இருந்தால் அவர் தன்னுடைய அன்றாட செலவுகளையும் மருத்துவ செலவுகளையும் கவனித்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நாங்களும் அலைந்து திரிந்து உங்களுடைய பணத்தை இழந்து விட்டோம் எனவே இந்த புதிய ஊழலற்ற அரசாங்கத்தில் ஆவது எங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment