அண்மைய செய்திகள்

recent
-

நத்தார் தின வாழ்த்துக்களையும் பரிசுப்பொருட்களையும் தாயகத்தில் சிறுவர் இல்லங்களில் வாழும் பாடசாலை மாணாக்கர்களுடன் பகிர்ந்துகொண்ட புலம்பெயர் சமூகம்- படங்கள்


இவ்வருட நத்தார் தினப் பரிசுப்பொருட்களையும் வாழ்த்துக்களையும் பிரான்சிலிருந்து இயங்கும் ரி.ஆர்.ரி தமிழொலி வானொலி நேயர்கள் தாயகத்தில் சிறுவர் இல்லங்களில் வாழும் சிறுவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:


நேற்று 25.12.2012 அன்று வவுனியாவில் உள்ள இறம்பைக்குளம் தூய பேதுரு சிறுவர் இல்லம், கணேசபுரத்தில் இயங்கும் வைகறை சிறுவர் இல்லம், கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லம் மற்றும் மீள்குடியேற்ற கிராமமான பாவற்குளம் முதலாம் யூனிட்டில் வசிக்கின்ற பாடசாலை மாணாக்கர்கள் உள்ளிட்ட ஆறு சிறுவர் இல்லங்களுக்கும் ரி.ஆர்.ரி. தமிழொலி வானொலி நேயர்களின் அன்பளிப்பில் அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை அவர்களின் சார்பாக நான் நேரில் சென்று வழங்கினேன்.

அதன்போது வைரவபுளியங்குளத்தில் இலங்கை ஜனாதிபதியின் பாரியாரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சிறிலியா செவன பெண்கள் காப்பகத்தில் உள்ள பெண்பிள்ளைகளுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

கணேசபுரம், வைகறை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் பல்வேறு திறமைகளுடன் விளங்குவதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இங்குள்ள பிள்ளைகள் தையல் பயிற்சியில் சிறந்து விளங்குகின்றனர். ஆயிரக்கணக்கில் பாடசாலைக்கான புத்தகப்பைகளைத் தைத்துக் கொடுக்கும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். அத்துடன் பிரயாணங்களுக்கான பைகள், மடிக்கணனிக்கான உரைகள், வாழ்த்து அட்டைகள் போன்ற பல்வேறு கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதற்குத் தகுதிவாய்ந்தவர்களாகத் திகழ்கின்றனர்.

வைகறை சிறுவர் இல்லத்தினர் எனக்கு ஒரு நினைவுப் பரிசினையும் வழங்கினர்.

இவர்களுக்குப் பாடசாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாய்ப்புக்களை வழங்கினால் இங்குள்ள பிள்ளைகளின் வாழ்வாதாரமும் வாழ்க்கைத் தரமும் உயரும். புலம்பெயர் உறவுகளும் இது குறித்துச் சிந்திப்பதுப் பார்ப்பது நல்லது.

நத்தார் பரிசுப்பொருட்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்ட ரி.ஆர்.ரி. தமிழொலி வானொலி நேயர்களுக்கு சிறுவர் இல்லங்களின் சார்பிலும் வன்னி மக்கள் சார்பிலும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

(மன்னார் நிருபர்)  







நத்தார் தின வாழ்த்துக்களையும் பரிசுப்பொருட்களையும் தாயகத்தில் சிறுவர் இல்லங்களில் வாழும் பாடசாலை மாணாக்கர்களுடன் பகிர்ந்துகொண்ட புலம்பெயர் சமூகம்- படங்கள் Reviewed by NEWMANNAR on December 26, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.