அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அடைக்கல மோட்டை வாய்க்காலினை புனர்நிர்மானம் செய்யும் பணியில் இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவு.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் உள்ள அடைக்கல மோட்டை வாய்க்காலினை புனர் நிர்மாணம் செய்யும் பணியினை இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.


 சுமார் 13 கிலோ மீற்றர்  நீளம் கொண்ட குறித்த அடைக்கல மோட்டை வாய்க்காலின் மூலம் வரும் நீரை பயன்படுத்தி குறித்த பகுதியில் உள்ள விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். குறித்த வாய்க்கால் முருங்கன் கட்டுக்கரை குளத்துடன் தொடர்பு பட்டதாக காணப்படுகின்றது.

 இந்த நிலையில் யுத்தத்தின் பின்பு தற்போது குறித்த வாய்க்கால் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் குறைந்த அளவு நீரே குறித்த வாய்க்காலினுடாக செல்லுகின்றது.இந்த நிலையில் குறித்த வாய்க்காலின் துப்பரவுப்பணி  மற்றும் புனர் நிர்மாணப்பணிகளை இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவு பொறுப்பேற்றுள்ளது.

 அதன் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்றது. இதன் போது இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் பிரிக்கேட் கொமான்டர் மைத்திரி டயேஸ்,542 ஆவது படைப்பிரிவின் பிரிக்கேட் கொமான்டர் எம்.எஸ்.பெரேரா, நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலகரட்னம் பண்டார ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர். -இதன் போது குறித்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





மன்னார் அடைக்கல மோட்டை வாய்க்காலினை புனர்நிர்மானம் செய்யும் பணியில் இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவு. Reviewed by NEWMANNAR on January 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.