அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேசத்தில் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துத்தருமாறு கோரிக்கை

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் இடம் பெயர்ந்து மீள் குடியேற்றப்பட்ட நிலையில் உள்ள சில கிராமங்களில் காணப்படுக்கின்ற குறை நிறைகளை தீர்த்துத்துருமாறு கோரி முசலி பிரதேச செயலாளருக்கு முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர்; ஏ.சுனேஸ்.சோசை கடிதம் ஒன்றை நேற்று(24-01-2013) வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.

 குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,,

 மேற்படி விடயம் தொடர்பாக 2007ம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்து 2009ம் ஆண்டில் மீண்டுமாக மக்களின்; சொந்த காணிகளிலும் சொந்த இடங்களிலும் இந்த மக்கள் குடியமர்த்தப்பட்டார்கள். இது மக்களுக்கு ஒரு பக்கத்தில் சந்தோசத்தினை அளித்தது. மறு பக்கத்தில் அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் நீங்களும் மற்றும் பிரதேச சபை தவிசாளர் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புக்களுடன் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செயற்படுத்தியுள்ளதினையும் செயற்படுத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளதினையும் அறியும் போது மக்களின் மனதில் ஒர் பேரானந்தம் ஏற்பட்டுள்ளதினை அறியக்கூடியதாக உள்ளது.

 இருந்த போதிலும் முசலி பிரதேசத்தில் பிரதேச சபை தவிசாளரின் அனுமதியோடு கடந்த 1அரை வருட கலமாக 5 கிராமங்களில் கிராம மட்ட பிரஜைகள் குழுவினை அமைத்து அதில் 25 நபர்களை உள்வாங்கி பிரதேச மட்டத்தில் பிரஜைகள் குழுவை ஏற்படுத்தி கூட்டங்களை நடாத்தி மக்களின் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அதனை தீர்த்து வைத்துள்ளோம்.

 இருந்த போதிலும் நாங்கள் கூட்டங்கள் நடாத்துகின்ற போது கிராமங்களில் பல குறை நிறைகளை மக்களிடத்தில் இருந்து கேட்கக் கூடியதாகவும் நாங்களும் சில குறைபாடுகளை கண்ணால் பார்க்கக் கூடியதாகவும் உள்ளது. எனவே கீழ் குறிப்பிடப்படுகின்ற கிராமங்களின் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வினை உரிய அரச பிரதி நிதிகள் ஊடாக செய்து தரும் படி முசலி பிரதேச பிரஜைகள் குழு ஊடாக கேட்டு நிற்கின்றோம்.

 கிராமங்களும் கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகளும்

 (1) சிறி பொற்கேணி:- நிரந்தர வீடுகள் காணப்படாமை,காணிகள் வழங்கப்படாமை ,வடிகால் அமைப்பு இன்மை ,ஆரம்பத்தில் இயங்கி வந்த பாடசாலை இயங்காமை,பாலர் பாடசாலைக் குரிய குடி நீர் வசதி இன்மை,சேமக்காலைக் குரிய சுற்று மதில்கள் அமைக்கப்படாமை.

 (2) சிலாவத்துறை:- பாலர் பாடசாலைக் குரிய குடி நீர் வசதி இன்மை,கர்ப்பிணி தாய்மாருக்கான கிளினிக் கட்டிடத்தினை பொலிசாரிடம் இருந்து பெற்றுக் கொடுத்தல்,கடற்படை அபகரித்து வைத்துள்ள மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,மீனவ பாஸ் நடைமுறை,கடற்றொழில் பரிசோதகர் இல்லாமை,வைத்திய சாலையினை பெரிதாக்குதல்.

 (3) கொண்டச்சிக் குடா:-இந்து மையானத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் காடு அளிக்கப்படல் வேண்டும் அத்தோடு எல்லை இட வேண்டும்,மக்களின் காணிகளை கடற்கடையிடம் இருந்து பெற்றுக் கொடுத்து அவர்களை தங்களின் சொந்த காணியில் குடியமர்த்த வேண்டும்.,குப்பைகளை அள்ளுவதற்கு கிழமையில் 1 தடவையாயினும் பிரதேச சபை ரெக்டர் வர வேண்டும்,போக்குவரத்து சேவை சீர் இல்லாமை,குடி நீர் பிரச்சினை,மீனவ பாஸ் நடைமுறை,கடற்றொழில் பரிசோதகர் இல்லாமை,வீதி விளக்குகளின் செயற்பாடு இன்மை. 15 பேருக்கு நிரந்தர வீடுகள் இல்லாமை.

 (4) சவேரியார் புரம் புதுக்குடியிருப்பு:-மின்சாரம் வழங்கப்படாமை,மீனவ பாஸ் நடைமுறை ,கடற்றொழில் பரிசோதகர் இல்லாமை,சீரற்ற வீதிகளும் வடிகால் அமைப்பு இன்மையும்,யானைகளின் அட்டகாசம்.

 (5) அரிப்பு:-வீதி விளக்குகளின் செயற்பாடற்ற தன்மை,உள்ளக வீதிகளுக்கான பெயர் பலகை இடல்,யானைகளின் அட்டகாசம்,மீனவ பாஸ் நடைமுறை,கடற்றொழில் பரிசோதகர் இல்லாமை

போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றது.. எனவே மேற்குறிப்;பிட்ட பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு தருமாறு முசலி பிரதேச பிரஜைகள் குழு ஊடாக கேட்டு நிற்கின்றோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதன் பிரதிகள் மன்னார் மாவட்ட அரச அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்,முசலி பிரதேச சபை தலைவர்,மன்னார் மாவட்ட உள்ளுராட்சி ஆனையாளர்,மன்னார் மறைமாவட்ட ஆயர்,மன்னார் பிரஜைகள் குழு,ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர்;ஏ.சுனேஸ்.சோசை மேலும் தெரிவித்தார்.
முசலி பிரதேசத்தில் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துத்தருமாறு கோரிக்கை Reviewed by NEWMANNAR on January 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.