அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் மன்னார் விஜயம்-மன்னார் நிலவரம் தொடர்பில் ஆராய்வு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரி றொயிஞ்சோம் மன்னாருக்கான  விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் வந்த அவர் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை தலைவர்,உபதலைவர்களுடன் மன்னாரின் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடினார்.


 இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகர சபைக்குச் சென்ற இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரி றொயிஞ்சோம் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,செயலாளர் எஸ்.ஜே.குரூஸ்.நகர சபையின் உறுப்பினர்களான இரத்தினசிங்கம் குமரேஸ்,அரச தரப்பு உறுப்பினர் டிலான் ஆகியோரை சந்தித்து உரையாடினார்.

 இதன் போது மன்னார் மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.இதே வேளை மன்னார் மாவட்டத்தில் தமிழ்,முஸ்ஸிம் மக்களின் நிலவரம்,மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,மாவட்டத்தில் இடம் பெற்று வரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் கேட்டரிந்தார். மக்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் அவர் கேட்டந்றிதார்.

 இதன் போது மன்னார் மாவடடத்தில் தற்போது அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலும்,குறிப்பாக அரச தரப்பு அமைச்சர் ஒருவரினால் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோத காணி அபகரிப்பு,பாகு பாடான வேலை வாய்ப்புக்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரி றொயிஞ்சோமிடம் தெரிவித்தனர்.

 மன்னார் மாவட்டத்திற்கு சொந்தமான அமைச்சர் ஒருவர் அவருக்கு பணிக்கப்பட்ட விடையங்களை விட சகல விடயங்களிலும் தலையிடுகின்றார். அவரின் செயற்பாடுகள் மன்னாரில் பாகுபாடான விதத்தில் இடம் பெற்று வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினர்.





இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் மன்னார் விஜயம்-மன்னார் நிலவரம் தொடர்பில் ஆராய்வு Reviewed by NEWMANNAR on January 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.