அண்மைய செய்திகள்

recent
-

தம்பனைக்குளம் கிராம மக்கள் மீண்டும் இடம் பெயர்வு

மல்வத்து ஓயா நீர் பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் நீரின் மட்ட அளவு 13 அடிக்கு தற்போது காணப்படும் நிலையில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் அவசர அவசரமாக நேற்று(10-1-2013) வியாழக்கிழமை இரவு சின்னப்பண்டிவிருச்சான் ம.வி பாடசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.


 மல்வத்து ஓயா பெருக்கெடுத்தால் முதலில் மன்னார் தம்பனைக்குளம் கிராமம் பாதிக்கும் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நீர் மட்ட அளவு 13 அடிக்கு உயர்ந்துள்ளது.

 இந்த நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 360 குடும்பங்கள் வரை இரவோடு இரவாக சின்னப்பண்டிவிருச்சான் ம.வி பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது வரை வெள்ள நீர் குறித்த கிராமத்தை சூழ்ந்து கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் மேலும் தெரிவித்தார்.


 கடந்த 21 ஆம் திகதி மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததன் காரணத்தினால் தம்பனைக்குளம் கிராமம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் குறித்த கிராம மக்கள் அனைவரும் இடம் பெயர்ந்து சென்று பின் வெள்ள நீர் வடிந்தோடிய நிலையில் மீண்டும் கடந்த வாரம் குறித்த கிராம மக்கள் தமது வீடுகளுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
தம்பனைக்குளம் கிராம மக்கள் மீண்டும் இடம் பெயர்வு Reviewed by NEWMANNAR on January 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.