அண்மைய செய்திகள்

recent
-

குஞ்சுக்குளத்தில் நடமாடும் மருத்துவ சேவை.( பட இணைப்பு)


நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ள  நிலையில் அந்த கிராமத்திற்கான  போக்குவரைவுகள்  நீண்ட நாட்களாக பாதிப்படைந்திருந்தது.


இந்த நிலையில்  அந்த மக்கள் மருந்துகளை  பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்   மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.பரீட் அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக முருங்கன் மாவட்ட வைத்திய அதிகாரி ஒஸ்மன் சால்ஸ் தலைமையிலான குழுவினர் நேற்று முந்தினம் திங்கட்கிழமை அங்கு சென்று நடமாடும் மருத்துவ சேவைகளை மேற்கொண்டனர்.

இதன் போது சுமார்  நூற்றிக்கு  மேற்பட்ட மக்களுக்கு மருத்துவச் சேவைகளை  மேற்கொண்டுள்ளனர்.
குஞ்சுக்குளத்தில் நடமாடும் மருத்துவ சேவை.( பட இணைப்பு) Reviewed by NEWMANNAR on January 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.