அண்மைய செய்திகள்

recent
-

மடு-மன்னார் வலய பாடசாலைகள் இன்றியங்காது!


மன்னார் பகுதிகளில் வெள்ளப் பெருக்கினால் வீடுகளை விட்டு பாடசாலைகளில் தஞ்சமடைந்திருக்கும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பும்வரை அவர்கள் தங்கியிருக்கும் மடு மற்றும் மன்னார் வலயப்பாடசாலைகள் இன்று (02) திறக்கப்படமாட்டாதென மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் தீபம் எம். முகமட் சியான் மற்றும் மடு வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ. ஜே. குறூஸ் ஆகியோர் தெரிவித்தனர்.



புதிய வருடத்தின் முதலாம் தவணைக்காக இன்று இரண்டாம் திகதி புதன்கிழமை தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தங்கியிருக்கும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்ற பின்பே குறித்த பாட சாலைகள் திறக்கப்பட இருப்பதோ விடுமுறையில் இருக்கும் பாடசாலை களுக்கான பதில் பாடசாலை வகுப்புக்கள் பிறிதொரு தினங்களில் நடத்தப்படுமெனத் தெரியவருகிறது.

இவ்விடயம் தொடர்பாக மடு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.குறூஸிடம் தொடர்புகொண்ட போது “மக்கள் தங்கியிருக்கும் பாடசாலைகளின் விடுமுறை தொடர்பாக ஆளுநரின் அனுமதிக்காக வடமாகாண கல்விச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

மடு கல்விவலயத்திலுள்ள அடம்பன், இசுறு பாடசாலை, ஆண்டாங்குளம் ம. வி, சின்னப்பண்டிவிரிச்சான் றோ. க. வி வட்டக்கண்டல் றோ. க. த. வி. இலுப்பைக்கடவை த. ம. வி. பாப் பாமோட்டை த. வி. ஆகிய ஆறு பாடசாலைகளும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் இடைத்தங்கல் முகாமாக காணப்படுகின்றன.
மடு-மன்னார் வலய பாடசாலைகள் இன்றியங்காது! Reviewed by NEWMANNAR on January 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.