அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபைக்கூட்டத்தின் போது வெளிநடப்புச் செய்த உறுப்பினர்கள்.(காணொளி & படங்கள் இணைப்பு)


மன்னார் நகர சபையின் இவ்வருடத்திற்கான  முதலாவது சபைக்கூட்டம் 21 ஆவது சபைக்கூட்டமும் இன்று திங்கட்கிழமை நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது நகர சபையின் செயலாளரின் சபைச் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை என தெரிவித்து நகர சபை உறுப்பினர்கள் சிலர் சபையை விட்டு வெளி நடப்புச்செய்துள்ளனர்.


மன்னார் நகர சபையின் இவ்வருடத்திற்கான  முதலாவது சபைக்கூட்டம் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை செயலாளர் எல்.ஜே.குரூஸ்,மற்றும் நகர சபையின் ஆளும் தரப்பு மற்றும் அரச தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நகர சபை உறுப்பினர்களாக அனைவரும் தெரிவு செய்யப்பட்டு சுமார் 20 மாதங்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் சபையில் எடுக்கப்படுகின்ற எந்த தீர்மானங்களுக்கும் நகர சபை செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என நகர சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.






இதே வேளை மன்னார் தினச்சந்தை வியாபாரிகளை வெளியேற்றி வாராந்த சந்தையாக மாற்றுதல்,மன்னாரில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை அடையாளம் காணும் வகையில் முச்சக்கர வண்டிகளில் இலக்கம் பதிவு செய்தல் உற்பட பல வேலைத்திட்டங்களை நடமுறைப்படுத்த சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற போதும் சபையின் செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவித்தார்.

இதே வேளை செயலாளர் அமைச்சருக்கு அடி பணிந்து செயற்படுவதாகவும் நகரசபைக்கு நீதியுடன் சேவை செய்வதில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சபையில் பேசிக்கொண்டிருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேசிற்கும்,அரச தரப்பு உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் என்பவருக்கும் இடையில் நீண்ட நேரம் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் மெரினஸ் பேரேரா பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அனைத்து செயற்பாடுகளும் நடமுறைப்படுத்தப்பட்ட பின்பே சபைக்கு வருவதாக கூறி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஆளும் தரப்பு உறுப்பினர்களான இரட்னசிங்கம் குமரேஸ்,பிரிந்தாவனநாதன் மற்றும் அரச தரப்பு உறுப்பினரான டிலான் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.இதனால் சபைக்கூட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக நகர சபையின் செயலாளர் எல்.ஜே.குரூஸ் தெரிவிக்கையில்,,,,,

-நான் அமைச்சருக்கு சார்பாக செயற்படுவதாக சபை உறுப்பினர்கள் என்மீது வீன் பலி சுமத்துகின்றனர்.அவ்வாறு நான் ஒரு போதும் செயற்பட்டதில்லை.நான் உள்ளுராட்சி சட்ட விதிகளுக்கு அமைவாகவே செயற்படுகின்றேன்.

-நீண்ட காலமாக சபைக்கூட்டத்திற்கு சமூகமளிக்காத அரச தரப்பு உறுப்பினர் என்.நகுசீன் இன்று கூட்டத்திற்கு வந்தமையினாலேயே இவர்கள் இன்று என்மீது குற்றச்சாட்டுக்ககை முன்வைக்கின்றனர்.நான் ஒருபோதும் விரோதமான முறையில் செயற்பட்டதில்லை என மன்னார் நகர சபை செயலாளர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


மன்னார் நகர சபைக்கூட்டத்தின் போது வெளிநடப்புச் செய்த உறுப்பினர்கள்.(காணொளி & படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on January 21, 2013 Rating: 5

3 comments:

Angelo said...

குற்ற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்கட்டும். மன்னார் மக்கள் உண்மையை அறிய வேண்டிய அவசியம் இங்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் மன்னார் நகர சபையால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? அவற்றில் நிறைவேற்றப்பட்டவை எவை? ஏதேனும் நிறைவேற்றப்படாத பட்சத்தில், அதற்கான காரணங்கள் எவை? என்ற விழக்கங்களை முதலில் மக்கள் முன் வையுங்கள்.

மன்னார் மக்களே, இனிமேலும் மௌனமாக இருக்க வேண்டாம். எங்கள் மாவட்டம் மேலும் பல துறைகளில் முன்னேறுவதற்கு எங்களுடைய விழிப்புணர்வு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான கலந்துரையாடல் மற்றும் விமர்சனங்கள் மூலமாக எமது நகர சபையை பலர் வியக்கும்படி அழகானதொரு நகரமாக மாற்றுவோம்.

அத்தோடு, இனிவரும் நகரசபை கூட்டங்களை பொது கூட்டமாக ஏற்பாடு செய்து, பொதுமக்களும் கலந்து கொள்ளும்படி செய்தல் எல்லோருக்கும் நன்மையாக அமையும்.

www.newmusali.com said...

Nallathu yarum saiwathai intha TNA urupinargal awarmal vien pali poduwathu walamai than Secratery mithu vean pali poduwathai vidu vidu poithu ungaduku votes poda pahgaduku nallathu saiungal

www.newmusali.com said...

Nallathu yarum saiwathai intha TNA urupinargal awarmal vien pali poduwathu walamai than Secratery mithu vean pali poduwathai vidu vidu poithu ungaduku votes poda pahgaduku nallathu saiungal

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.