அண்மைய செய்திகள்

recent
-

மனித நேய பணிக்கு லிபபேரா ( LABERA )படங்கள் இணைப்பு


“LABERA  “ Gives helping hand to The Meththa Artificial Limbs fitting unit
கடந்த மாசி மாதம் 18,19,20ம் திகதிகளில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இயங்கும் செயற்கை அவயவங்கள் பொருத்தும் மேத்தா நிறுவனம், தமது 35வது நடமாடும் சேவையை கிளிநொச்சியில் அமைந்துள்ள கருணா இல்லத்தில் நடாத்தியது. 











எமது மனிதநேய ஸ்தாபனத்திற்கு நிதி வழங்கும் 'லெபரா' தாபன வெளிநாட்டு பிரதிநிதிகளும் உள்நாட்டு பிரதிநிதிகளும் 18ம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன் அன்றய தினம் வருகை தந்த 120 பயனாளிகளுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளையும், பொய்க்கால், பொய்க்கைகளின் பாவனைகள் பற்றியும் கலந்துரையாடி அறிந்து கொண்டனர்.
இந்த மூன்று நாட்கள் நடமாடும் சேவையில் 77 பயனாளிகள் பயன் பெற்றனர். இதில் 5 நபர்களுக்கு புதிய கைகள் அளவு எடுக்கப்பட்டதுடன், ஒருவருக்கு கை பொருத்தப்பட்டது. அத்துடன் 32 நபர்களுக்கு புதிய கால்கள் அளவெடுக்கப்பட்டதுடன் மேலும் 39 நபர்களுக்கு எம்மால் வழங்கப்பட்ட பொய்க்கால்கள், பொய்க்கைகள், சார்பு உறுப்புக்கள் 6 மாதம் தொடக்கம் 12 மாதம் வரை பாவனையின் பின் திருத்திக் கொடுக்கப்பட்டது.
எமது; பயனாளிகள சுமார் 80 க்கு மேற்பட்ட 3 வயது தொடக்கம் 18 வயது வரையான பாடசாலைச் சிறுவர்கள் அடங்குவர். இவர்களில் அநேகர் கல்வி கற்பதற்காக எமது உதவியை நாடியுள்ளனர். இவர்களுக்கு உதவி புரியும் நோக்கோடு மேத்தா ஐக்கிய இராட்சியம், ' லெபறா ' கிளிநொச்சி, முல்லைத்தீவு இயக்குனர்களையும் ' ஊயனெடந யனை ' தாபனத்தையும் நாம் அணுகியுள்ளோம். உதவி கிடைக்கும் பட்சத்தில் எம்மால் பயனாளிகளின் பெற்றோரின் விபரங்கள் கேட்கப்பட்டு மாதாந்த கொடுப்பனவுகள் அவர்களின் வங்கி கணக்கில் இடப்படும்.
மாசி மாதம் அளவு; எடுக்கப்பட்ட சகல கை, கால் செயற்கை அவயவங்கள் அனைத்தும் கிளிநொச்சி கருணா இல்லத்தில் வைத்து பங்குனி மாதமளவில் வழங்கப்படும். மக்களின் துயர் துடைக்க சேவையாற்றும் மேத்தா நிறுவனத்திற்கு தமது நிதி பங்களிப்பினை வழங்கிய ஆசிய லெபரா பணிப்பாளர் வண.பிதா ஜூவா போல் ழுஆஐ அவர்களுக்கும், இலங்கை லெபரா பிரதிநிதியான வண.பிதா போல் நட்சத்திரம் ழுஆஐ  அவர்களுக்கும், வடமாகாண லெபரா பிரதிநிதி வண.பிதா பீஸ்மன் ழுஆஐ அவர்களுக்கும் பயனாளிகள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

திரு. சின்கிலேயர் பீற்றர்
மெத்தா தொடர்பு அதிகாரி, 

மெத்தா செயற்கை அவய நிறுவனம்.
பொது வைத்தியசாலை. மன்னார்,
தொ. பே. 077-2131-652
மின் அஞ்சல்  petsinclair@gmail.com
            mfmannar@gmail.com
மனித நேய பணிக்கு லிபபேரா ( LABERA )படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on February 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.