அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ள பெற்றோர்களின் கவனத்திற்கு

மன்னார் மாவட்டத்தில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றித்திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவியிறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கடந்த சனிக்கிழமை வாகனம் ஒன்றில் வந்த நபர்கள் காலை 06 மணியளவில் மன்னார் ஸ்ரேடியம் பகுதியில் சிறுவன் ஒருவனுக்கு சிற்றூண்டிகளை வழங்கி வாகனத்துக்குள் ஏற்ற முற்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதுடன் தப்பியோடிய சிறுவனை பின் தொடர்ந்தும் உள்ளனர்

குறித்த சிறுவன் தப்பியோடி வீட்டி நடந்த விடயங்களை தெரிவித்த நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த வாகனத்தை தேடிய நிலையில் அவ்வாகனமும் வாகனத்தில் இருந்தவர்களும் அப்பகுதியில் இருந்து தப்பித்து சென்றுள்ளனர்

எனவே மன்னார் மாவட்டத்தில் தனியார் வகுப்பு உட்பட ஏனைய வேலைகளுக்கு சிறுவர்களை தனியாக அனுப்பும் பெற்றோர்கள் அவதானமாக இருப்பதுடன் இவ்வாறு சந்தேகத்துக்கு இடமான நபர்களோ வாகனங்களோ உங்கள் பகுதிகளில் உலாவினால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கவும்

மன்னாரில் உள்ள பெற்றோர்களின் கவனத்திற்கு Reviewed by NEWMANNAR on May 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.