அண்மைய செய்திகள்

recent
-

போரினாலும் விபத்தினாலும் பாதிக்கப்பட்ட ஊனமுற்றோருக்கு உதவிக்கரம் நீட்டும் மேத்தா நிறுவனம்

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கவும், சுகாதார அமைச்சின் அழைப்பின் பெயரில், போர் முடிவுற்ற பின் 2009 ஆடி மாதத்தில் ஜக்கிய இராட்சியம் லண்டனில் இயங்கும் 'மேத்தா நிறுவனம்' மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 10.07.2009 ல் தமது மனிதநேய பணியை ஆரம்பித்தது. 


30.12.2012 வரை இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் தமது பணியை 1,738 ஊனமுற்றோருக்கு இலவச சேவை ஆற்றியுள்ளது. இதில் 706 பேர் மன்னார் வைத்தியசாலையில் அமைந்துள்ள நிலையத்திலும் 1,032 நபர்களுக்கு மேத்தா நடமாடும் சேவை மூலமும் பணியாற்றியுள்ளது.

 எமது பயனாளிகளில் 80மூ நபர்கள் போரினால் பாதிக்கப்பட்டோரும்,                12 மூ விபத்தினால் ஊனமுற்றோரும் , 5மூ நீரழிவு நோயினால் அவயவங்கள் துண்டிக்கப்பட்டோரும் , 3மூ பிறப்பினால் ஊனமுற்ற சிறார்களும் அடங்குவர்.

பால் அடிப்படையில் நோக்குகையில் 1,139 ஆண்களும், 4,153 பெண்களும், 76 சிறுவர்களும் 70 சிறுமிகளும் பயன் அடைநதுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் மொத்தம் 1,420 நபர்கள் பயனடைந்துள்ளனர். 

அதிகூடிய எண்ணிக்கையில் 
கிளிநொச்சி மாவட்டத்தில் 472 நபர்களும் , 
முல்லைத்தீவில் 352 நபர்களும் ,
மன்னாரில் 292 நபர்களும், 
வவுனியாவில் 159 நபர்களும் உதவி பெற்றுள்ளனர். 

கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 31 நபர்கள் உதவி பெற்றுள்ளனர்.
 இவர்களில் மட்டக்களப்பில் 20 நபர்களும்,
 திருகோணமலையில் 8 நபர்களும், 
அம்பாறையில் 3 நபர்களும் அடங்குவர். 
ஏனைய மாவட்டங்களில் மொத்தம் 287 நபர்கள்,
  அனுராதபுரத்தில் 95 நபர்களும் , 
மாத்தறையில் 35 நபர்களும் ,
கண்டியில் 45 நபர்களும் ,
குருநாகலில் 35 நபர்களும், 
கொழும்பில் 14 நபர்களும். 
புத்தளத்தில் 11 நபர்களும் சேவையினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேத்தா நடமாடும் சேவைக்கு ஓர் புதிய நடமாடும் வாகனம் கடந்த வருடம் பெற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த 3 வருடத்தில் சுமார் 35 நடமாடும் சேவைகள் மேத்தா வைத்தியர்களினாலும், தொழில் நுட்ப உத்தியோகத்தர்களினாலும், தொண்டு அமைப்புக்களினதும் மற்றும் அரச அதிபரின் உதவியுடனும் நடாத்தப்பட்டது .இச்சேவையானது வவுனியா, கிளிநொச்ச,p முல்லைத்தீவி, பூனகரி , வெள்ளாங்குளம், இலுப்பைக்கடவைப் பாடசாலை, கண்டி, மாத்தறை போன்ற இடங்களில் இரண்டு மாதத்திற்கு ஒரு தடைவ நடத்தப்பட்டது.

இந்த நடமாடும் சேவை மூலம் சுமார் 1,032 ஊனமுற்றோர் பயன் பெற்றுள்ளனர். மன்னார் மாவட்டத்திற்கு வெளியில் நடைபெறும் சேவை மூலம் அதிகளவான பெண்களும், சிறுவர்களும் பயன் பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. 150 பெண்கள், 76 சிறுவர்கள், 48 சிறுமிகள், மற்றும் பாடசாலை சிறார்கள் பயனடைந்தமை குறிப்பிடக்கூடியது. இதுவரை 1,151 நபர்களுக்கு ஒன்று தொடக்கம் மூன்று வரை முழங்காலுக்கு மேல் அல்லது முழங்காலுக்கு கீழ செயற்கைக் காலும், 22 நபர்களுக்கு தோள் மூட்டுக்கு கீழ் மற்றும் முழங்கைளுக்கு கீழ் செயற்கைக் கைகளும் வழங்கப்பட்டன. 181 ஆதார கை உறுப்புக்களும், 17 ஆதார கால் உறுப்புக்களும் 347 தடவை உறுப்புக்கள் திருத்தியும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 132 நடமாடும் கருவிகளும், 29 சக்கர நாற்காலிகளும், 50க்கு மேற்பட்ட கழுத்துப்பட்டி  கவசங்களும், இடுப்புப்பட்டி கவசங்களும், பாத மற்றும் முழங்கால் கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன.






மாற்றுத்திறனாளிகளுக்கு அவசிய வாழ்வாதார உதவிகள் திட்டத்தில், சிறார்களின் கல்வி, தையல் இயந்திரம், விவசாயம் மற்றும் சிறு கைத்தொழில் இயந்திரங்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள 43 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த மகத்தான பணிகளுக்கான நிதியுதவி;களை மனமுவந்தளித்த லண்டன் சிவன் இல்ல வைத்திய கலாநிதி ந. நமசிவாயம் ஜயா, லிபரா இலங்கை இயக்குனர் வண. பிதா போல் நட்சத்திரம், ' லண்டன் மேத்தா தலைமை காரியாலயம், லண்டனஃ இலங்கை றொட்டரி கழகத்தினர், ஏனைய நலன் விரும்பிகள் போன்றோருக்கும், இலங்கை பாதுகாப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு, மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரி, மாவட்ட வைத்திய அதிகாரிகள், மன்றம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா அரச அதிபர்கள் போன்றோருக்கு மேத்தா நிறுவனம் தனது 3ம் ஆண்டு நிறைவில் நன்றியைத்தெரிவிக்கின்றது.

எமது கடந்த கால அவதானிப்புக்களின்படி , போரின்பின் பல மனித நேய அமைப்புக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பலவிதங்களில் இலவச சேவைகளை ஆற்றி வருகின்றன. ஒரு சிலர் இவற்றை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். சிலரிடம் 3-4 செயற்கை உறுப்புக்கள் உள்ளன. சிலரின் பொறுப்பற்ற தன்மையால் பல ஆயிரம் ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. பெறுமதி மிக்க செயற்கை அவயவங்கள் வீணடிக்கப்படுவதைத் தடுப்பது மிக அவசியமானது. மேலும் 18 வயதுக்குட்பட்டோருக்கான செயற்கை அவயவங்கள் அவர்களின் வளர்ச்சிக்கேற்ப காலத்திற்கு காலம் புதுப்பிக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதில் அரச அதிபர்கள் முக்கிய பங்காற்றி;  உதவி செயதல, பிரயாணங்களின் போது மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவி செயதல்;.









அது மட்டுமன்றி சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் இயன் மருத்துவ சேவைகள், உடல் அப்பியாசங்கள் தேவை என்பதைக்க கருதி தைலம்,எண்ணை தேய்த்து ஊனமுற்ற பகுதிகளை உயிரோட்டம் உள்ளதாக வைத்திருக்க வகை செயதல்;;;. பயனாளிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட 80மூ நடமாடும் கருவிகள் தற்காலிக பயன்பாட்டிற்குரியவை. தேவை முடிந்த பின் தேவையுள்ள இன்னொருவருக்கு வழங்கக் கூடிய வகையில் வழங்கிய நிறுவனத்திடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். நடமாடும் நாற்காலியிலிருந்து கொண்டு குளிக்கக்கூடாது. அவற்றை மிக நேர்த்தியாகப் பயன்படுத்த அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதிகமான வைரஸ் தொற்றுக்கள் உபகரணங்கள் மூலமே காவப்படுகின்றன. அவயவங்கள் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கான உறைகள் ,மற்றும் கைஃ கால் உறைகளை கழுவி ,சுத்தமாக பாவிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயவங்கள், உபகரணங்கள் மிக மென்மையானவை. அவை பழுதடையும் போது வழங்கிய நிறுவனத்திடம் சேவைக்காக கொண்டுவர வேண்டுமே தவிர வாகனம் திருத்தும் இடங்களில் கொடுக்கக்கூடாது.

 40 வயதுக்கு மேற்பட்டோர் செயற்கை அவயவங்கள் பொருத்தும் போது நீரழிவு நோய் பற்றிய பரிசோதனை செய்தல் அவசியம். கட்டுத்துவக்கு, மிருகங்களின் பொறிகளில் சிக்கி அவயவங்கள் இழந்தோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். சக்கர நாற்காலிகளில் பயணம் செய்வோர் வாகனங்கள் குறித்து மிக அவதானமாக இருக்கவேண்டும். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு எலும்புகள் வளரும் சாத்தியம் இருப்பதால் மாற்று அவயவங்களைப்பயன்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆகவே இது தொடர்பான சத்திர சிகிச்சையினை உரிய முறையில் குறித்த காலத்தில் மேற்கொள்ள வேண்டும். ஆயினும் ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

மாற்றுத்திறனாளிகளில் இரக்கப்படுவதை  விடுத்து , அவர்களுக்கு சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கான வலுவைக்கொடுங்கள். நற்பிரசையாக வாழ வழி காட்டுங்கள். மேலதிக விபரங்களுக்கு மேத்தா நிறுவனம் அல்லது செயற்கை அவயவங்கள் வழங்கிய நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

என்றும் உங்கள் சேவையில் இனிமை காணும் மேத்தா நிறுவனம்.



திரு. சின்கிலேயர் பீற்றர்,

மேத்தா நிறுவன தொடர்பு அதிகாரி,

மாவட்ட வைத்தியசாலை, மன்னார்.

05-02-2013.
போரினாலும் விபத்தினாலும் பாதிக்கப்பட்ட ஊனமுற்றோருக்கு உதவிக்கரம் நீட்டும் மேத்தா நிறுவனம் Reviewed by NEWMANNAR on February 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.