அண்மைய செய்திகள்

recent
-

'மன்னாரில் சைவ சமய வரலாறும் அதன் வளர்ச்சியும்' (ஒரு சுருக்கநோக்கு)


கலாநிதி. சிவஸ்ரீ.சபா. மனோகரகுருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு குரு பூஜை தினம் நினைவுப் பேருரை



பேருரையாளர்
திரு. சந்நிரலிங்கம் ரமேஸ்
BA (Cey),Dip in Teaching Hin(spl),PG Dip in Edu,PG Dip In Edu Mgt,     MA in Tamil(Jaffna University)
கலாநிதி மனோகரக்குருக்கள் நற்பணி மன்றம் மன்னார்.
31.03.2013


'மேன்மையுறு சைவநெறி உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்'
கடவுள்வாழ்த்து

ஓரானைக் கன்றை உமையாள் திருமகனை
பேரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராக புத்திவரும் விந்தை வரும்
புத்திர சம்பத்துந் தரும், சக்திதரும், சித்தி தரும் தான்
-நக்கீரர்'



மன்னாரில் சைவசமய வரலாறும் அதன் வளர்ச்சியும். (ஓர் சுருக்க நோக்கு)

1.0 அறிமுகம்
'மன்னாரில் சைவசமய வரலாறும் அதன் வளர்ச்சி நிலையும'  என்ற ஓர் ஆய்வுச்சுருக்க நோக்கினை கலாநிதி சபா.மனோகரக் குருக்களின் முதலாவது குருபூசைத்தினமாகிய 31.03.2013 (ஞாயிறு) இன்று குருவின் பாதக்கமலங்களுக்கு சமர்ப்பித்து உங்கள் முன்னிலையில் பேருரையாற்ற எல்லாம் வல்ல குருகணபதியை உள்ளத்தே இருத்தி உரையாற்ற விளைகின்றேன்.

2.0 மன்னார் சிவபூமி மாவட்டம்
மன்னார் சிவபூமி மாவட்டத்தின் அமைவிடமானது இந்து சமூத்திரத்தின் நித்திலம் என சிறப்பிக்கப்படுகின்ற ஈழத்திருநாட்டின் வடமேற்குத்திசையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே கிளிநொச்சி மாவட்டமும், வடகிழக்கே முல்லைத்தீவு மாவட்டமும், கிழக்கே வவுனியா மாவட்டமும், தென்கிழக்கே அநுராதபுரமாவட்டமும், தெற்கே புத்தளம் மாவட்டமும், மேற்கே மன்னார் குடாக்கடலையும் எல்லையாக கொண்டுள்ள முல்லையும், மருதமும், நெய்தலுமான திரிநிலப்பூமியிலே வரலாறு காணாத சைவத் தொல்குடியினர் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதினையும், அவர்களின் வரலாறுகளையும், இன்றும் அதன் வளர்ச்சியினையும் நோக்குவது சாலவும் பொருத்தமானது.

ஒரு இனமானது மதம், மொழி ஆகிய இரண்டுமே கண்களாகக் கொண்டு அவற்றில் பற்ருறுதியுடன் இருப்போமேயானால் அந்த இனத்தின் இருப்பை எக்காலத்திலும் நிலைநிறுத்திக் கொள்ளமுடியும்.

ஆனால் ஈழத்தில் தமிழர்களோ அதிலும் குறிப்பாக சைவத்தமிழர்கள் காலத்திற்கு காலம் ஏற்பட்ட பல்வேறு இன, மத, ஒடுக்குதலுக்கு உட்பட்டு நாதியற்றவராய் நட்டாற்றில் விடப்பட்டவர் போல் நாம் பிறந்து நாம் தவழ்ந்து பின் நடந்து திரிந்து எம் முந்தையரின் வழிவந்த தேசம் இன்று முகவரி இழந்து நிற்பது யார் செய்த பாவமோ! மறத்தமிழர்கள் மடிந்ததாக சரித்திரம் இல்லை. உண்மைகள் ஒரு காலமும் உறங்கியது இல்லை.

உறங்கவைப்பவர்களையே உறங்கச் செய்யும் எம் இனமும் மதமும், எப்பொழுதும் குன்றிலிட்ட தீபம் போல் உண்மையை உரத்துச் சொல்லும் வரலாறு உள்ள எம் இன, மதம் வரலாற்றில் எப்பொழுதும் அழியாது! இந்த சத்தியத்தோடே சிவபூமியின் பாரம்பரிய வரலாற்றினை பின்வரும் காலப்பிரிப்பில் நோக்கின் புலப்படும்.

3.0 மன்னார் சிவபூமியின் சைவசமய வரலாறு
மன்னார் சிவபூமியின் சைவசமய வரலாறானது பின்வரும் வரலாற்று கால அம்சங்களில் பிரித்து நோக்க முடிகின்றது. அவை

3.1 வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
3.2 வரலாற்றுக் காலம்
அந்த வகையில் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தினை பின்வரும் அம்சங்களில் பிரித்து நோக்க முடிகின்றது. ஆவையாவன
3.1.1 ஆதிகாலம்
3.1.2 இதிகாச காலம்
3.1.3 மாதோட்ட துறைமுக காலம்  எனவும் வரலாற்றுக் காலத்தினை பின்வரும்       காலஅடிப்படையில் பிரித்து நோக்க முடிகின்றது. ஆவையாவன
3.2.1 ஆரம்ப காலம் (கி.பி 1-5 ம் நூற்றாண்டு வரை)
3.2.2 சமய நாயன்மார்கள் காலம் (கி.பி 6-9ம் நூற்றாண்டு வரை)
3.2.3 தமிழகமன்னர் ஆதிக்ககாலம் (கி.பி 10-14ம் நூற்றாண்டு வரை)
3.2.4 போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் (கி.பி 15-18ம் நூற்றாண்டு வரை)
3.2.5 ஆறுமுகநாவலர் காலம் (கி.பி 19ம் நூற்றாண்டு)
3.2.6 மறுசீரமைப்புக் காலம் (கி.பி 19 – 20ம் நூற்றாண்டு)
3.2.7 ஈழப்போராட்ட காலம் (கி.பி 20ம் நூற்றாண்டின் இறுதி)
3.2.8 தற்காலம்

3.1.1 ஆதிகாலம்

மன்னார் சிவபூமியின் சைவசமய வரலாற்றினை நோக்குவோமாயின் அதன் ஆதிகால வரலாறு ஆனது மாதோட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வர சிவத்தல சேத்திர வரலாற்றோடு ஆரம்பிக்கப்படுகின்றது. அந்த வகையில் சைவசமயத்தின் தொன்மையானது இற்றைக்கு 5000ம் ஆண்டுகளுக்கு முன்னரான சிந்துவெளி நாகரிகத்துடன் ஆரம்பிக்கப்படுவதாக சேர். ஜோன் மார்ஷல் குறிப்பிடுகின்றார். எனவே சிந்துவெளி நாகரிகமானது மனித நாகரீகம் தோன்றிய எகிப்திய, சுமேரிய (மொசப்பத்தெமிய) நாகரீகத்துடன் ஒப்பிட்டு அந்நாகரீக காலத்திற்கு சமமான காலமாக சி;ந்துவெளி நாகரீகத்தினை கருதுகின்றனர் அகழ்வாரச்சியாளர்கள். அந்த வகையிலே பழம்பெரும் நாகரீகமான சிந்துவெளி நாகரீகம் போன்று மன்னார் சிவபூமியின் மாதோட்ட நாகரீகமும் அதற்கு சமமான காலங்களில் தோன்றியுள்ளது என மொஹஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களோடு மாதோட்டமும் ஒப்பிட்டு கூறப்படுகின்றமையானது அதன் ஆதிகால சைவ பாரம்பரியத்தை சிறப்பிக்கின்றது.

'ஏறத்தாழ இற்றைக்கு 3800 ஆண்டுகளுக்கு முன்னர் மாந்தை துறைமுகம் இருந்தது என்பதையும் அங்கிருந்து    அக்காலத்தில் இந்தியாவிற்கு செம்பு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதையும் இலங்கை தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எஸ்.யூ தெரனியகலை என்பவர் 1997 இல் ஆராய்ச்சி முடிவாக வெளியிட்டுள்ளார். எனவே, மொஹஞ்சதாரோ, ஹரப்பா காலத்திலும் மாந்தை நிலவியது என்பது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.1
                                      மேலும் ஈழநாட்டின் ஆதிக்குடிகளாக இயக்கர், நாகர், வேடர் முதலான கோத்திர இனத்தவர்களே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களில் குறிப்பாக நாகர்கள் மாதோட்டத்தில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இன்னும் அவர்கள் வாழ்ந்த ஊரான மாந்தை சந்தியில் இருந்து அடம்பன் வீதியூடாக ஏறத்தாழ 1.5முஅ கல் தூரத்தில் பெரியநாவற்குளம் (பெரிய நாகர் குளம்), இதிலிருந்து தெற்கு திசைநோக்கி 2முஅ கல் தூரத்தில் நாகதாழ்வு (நாகர் தாழ்வு), மன்னார் பிரதான வீதியிலிருந்து மாந்தைக்குச் செல்லும் வழியில் சிறுநாவற்குளம் (சிறிய நாகர் குளம்) அமைந்துள்ளது. இது ஆதிக்குடிகளான நாகர்கள் தமது குல அடிப்படையில் வாழ்ந்த இடங்களாகும். எனவே ஆதிக்குடிகளான நாகர்கள் மாதோட்டத்தில் வாழ்ந்து திருக்கேதீச்சரத்தை வழிபட்டதாகவும் கூறப்பட்டது.

'இயக்கர்களும,; நாகர்களும் இலங்கையின் பூர்வீகக் குடிகளாவர். நாகர்களும் திருக்கேதீச்சரத்தை வழிபட்டதற்குச் சான்றாக 'நாகநாதர்' என்றொரு பெயர் திருக்கேதீச்சரநாதருக்கு இன்னமும் வழங்குகின்றது.'2

எனவே மேற்குறிப்பிட்ட சான்றாதாரங்களில் இருந்து மன்னார் சிவபூமியில் சைவர்களின் மிகவும் தொன்மையான காலத்தில் வாழ்ந்துள்ளமையினையும், பெரும்பாலும் சைவர்களது கலாசாரம் ஆதிகாலத்தில் இருந்து திருக்கோயில்களை மையமாக கொண்டு வளர்ந்தமையினை நோக்க முடிகின்றது.

3.1.2 இதிகாச காலம்
மன்னார் சிவபூமியின் சைவப்பாரம்பரியமானது இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றுடன் தொடர்புடையனவாக காணப்படுகின்றது. குறிப்பாக மகாபாரதத்தில் அர்ச்சுணன் பல தலங்களுக்குச் சென்று பின் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு ஈழம் நோக்கி வந்து திருக்கேதீச்சர நாதரை வழிபட்டதுடன் இங்குள்ள புண்ணிய தீர்த்தமாகிய பாலாலியிலும் நீராடிச் சென்றதாகவும் தட்சிணகைலாச புராணம் கூறுகின்றது.
மேலும் இராமாயணத்தில் இராமன் ஈழத்திற்கு வந்து இராவணனோடு போர் புரிந்து பின் அவனைக் கொன்றமையினால் ஏற்பட்ட 'பிரமகத்திதோஷம்' நீங்க பாலாவியில் புனித நீராடி தோஷம் களைந்து பின் 108 சிவலிங்கங்களை திருக்கேதீச்சரத்திற்கு அன்பளிப்புச் செய்து பின் இராமேஸ்வரம் மீண்டதாகவும்
'பெரும் படையுடன் சமுத்திரங் கடந்து இலங்கை நகர் வந்து இராவணனை சூழ்ச்சியால் கொன்ற பாவம் நீங்குவதற்காக பாரிய துறைமுகமாகவும் அழகான தேசமாகவும் இருந்த மன்னார் மாதோட்டத்தில் திருக்கேதீஸ்வர நாதரை வணங்கியும், பாலாலியில் நீராடியும் பின் தனுஷ;கோடிக் கரையில் இராமஈஸ்வரம் (தற்போதைய இராமேஸ்வரம்)அமைத்தார.;'3
 சிவநேசச் செல்வனான இலாங்காபுரி வேந்தன் இராவனணின் மனைவியும், மயனின் மகளுமான மண்டோதாரியால் இத்தலம் வழிபடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
               மேலும் திருக்கேதீச்சர ஆலயம் அமைந்துள்ள இடத்தினை அடுத்துள்ள இடங்களில் ஆட்சியாளர்கள் குடியிருந்த மாளிகைகள் காணப்பட்டன. இதுவே தற்போது     'மாளிகைத்திடல்' எனவும் ஆலயத்திற்கு பூசை செய்யும் பிராமணர்கள் வசித்த இடம் பார்ப்பணர்மோட்டை(பாப்பாமோட்டை) எனவும், திருக்கேதீச்சர ஆலயத்திற்கு நீர்வழங்கும் நீர்பாசனக்குளம் அமைந்தது 'கோயிற்குளம்' எனவும் இன்னும் பல அயற்கிராமங்கள் காணப்படுவது மன்னார் சிவபூமியின் சைவப்பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுகின்றது.

3.1.3 மாதோட்ட துறைமுக காலம்
 'மகா துவட்டா' என்னும் தேவதச்சன் இப்பிரதேசத்தை ஆண்டு இங்குள்ள சிவத்தலமாகிய திருக்கேதீச்சரத்தை வழிபட்டான் எனவும் இதனால் இவ்விடம் 'மகாதுவட்டாபுரம்' எனவும் பின்னாளில் 'மாதோட்டம்' எனவும் விளங்கியது என்பர். மகாதுவட்டா இராமாயண காலத்திற்கு முந்தியவர் எனக் கூறப்படுகின்றது. இவ் மாதோட்டம் ஆனது மிகவும் வளம் பொருந்திய நிலப்பிரதேசமாக காணப்படுகின்றது. இதனாலே இங்கு தெங்கு மரமும், நுங்குமரமும், தெம்மாங்கு பாடுவதும். வாழைத்தோட்டங்கள், மாஞ்சோலைகள், பலாமரங்கள் எனும் முக்கனி தருகின்ற மரங்களும், வண்டு பண்செய்யும் பூமரச்சோலைகளும் எண்ணற்ற பயன்தரு, நிழல் தருகின்ற மரச்சோலைகளாலும் சூழப்பட்டதும் எங்கும் வயல் நிலங்களாகவும் காணப்பட்டதினால் பெரிய தோட்டங்களும் இங்கு இருந்திருக்கின்றன. இதனாலோ மா-பெரிய எனக் கொண்டு 'மாதோட்டம்' எனவும் இவ்விடம் அழைக்கப்பட்டிருக்கலாம்.

மேலும்
கி.மு 3ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 5ம் நூற்றாண்டு வரை மாதோட்டக் கரையில் பண்டமாற்று வியாபாரம் நடைபெற்று வந்துள்ளது. இக்காலத்தில் மாதோட்டம் உலகப்பிரசித்தி பெற்ற ஒரு வர்த்தக துறைமுகமாகவும் விளங்கிற்று. அப்போது உரோமானியர், எகிப்தியர், கிரேக்கர், சீனர், அரேபியர் முதலானோர் இங்கு வந்து கூடி பண்டமாற்று வியாபாரம் செய்துள்ளனர்.4

கி.மு 6ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டு அரச குமாரனான விஜயன் என்பவன் தன் நண்பர்களுடன் இம் மாதோட்டத் துறைமுகத்தினூடாக இலங்கையை அடைந்தான் என்றும் அப்போது இத்துறைமுகம் 'மகாதித்தா' எனப் பெயர் பெற்று விளங்கியது என்றும் மகாவம்சம் என்னும் நூல் கூறுகின்றது. 'தித்தா' என்பது பாளி மொழியில் துறைமுகம் என்பதாகும்.5
எனவே இவ்வாறு விஜயனுடன் வந்த அவனது அமைச்சர்களுள் ஒருவனான உபதிஸ்ஸ என்ற பிராமணனால் திருக்கேதீச்சரம் வழிபடப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன் முன்னரும், பின்னரும் பல கடல்கோள்கள் இடம்பெற்று மாந்தையின் சில பகுதிகள் அழிந்தன. இவ்வாறு வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் மன்னார் சிவபூமியில் சைவப்பாரம்பரியம் சிறப்புற்று விளங்கியதினை நோக்க முடிகின்றது.

          வரலாற்று காலத்தில் சைவசமயத்தின் பாரம்பரியமும், அதன் வளர்ச்சியினையும் பின்வரும் காலஅடிப்படையில் நோக்குவோம்.

3.2.1 ஆரம்ப காலம் (கி.பி 1-5ம் நூற்றாண்டு வரை)
இக்காலப்பகுதியிலும் மன்னார் சிவபூமியில் சைவர்கள் சிறப்பாக வாழ்ந்துள்ளனர் எனவும், ஈழத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு வணிக முறையிலும், இலக்கியங்களின் தொடர்பாடலும் ஏற்பட்டதினை அறிய முடிகின்றது. அக்காலத்தில் பல சைவ மரபினரான புலவர்கள் மாந்தையையும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்ந்து பல வாய்மொழி பாடல்களை பாடியதாகவும், சங்க காலத்தில் வாழ்ந்த புலவரான முறஞ்சியூர் முடினாகனார் என்பவர் மன்னார் முசலியை சேர்ந்தவர் என இடப்பிறழ்வான கருத்து காணப்படுகின்றது. மேலும் அகநானூற்றில்
'நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை கொணர்ந்த பாடுயர் நன்னகர்..'
என 'மாந்தை'கூறப்படுவதிலிருந்து மாந்தைக்கும், தமிழகத்திற்கும், புலவர்களுக்கும் தொடர்பு இருந்துள்ளது என்பது ஈண்டு நோக்கத்தக்கது. அத்துடன் திருமூலர் தனது திருமந்திரத்தில் ஈழத்தை 'சிவபூமி' என அழைத்துள்ளார்.

'தொலமி என்னும் புவியியலறிஞ்ர் கி.பி 2ம் நூற்றாண்டில்; மாதோட்டம் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.'6

'கி.பி 4ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட ஸ்ரீமேகவண்ணன் என்னும் சிங்கள அரசனின் காலத்தில் மாதோட்டத்திற் சைவக் கோயில் ஒன்று இருந்ததென 'தாதுவம்சம்' எனும் நூல் கூறுகின்றது.7


3.2.2 சமய நாயன்மார்கள் காலம் (கி.பி 6 – 9 ம் நூற்றாண்டு)
                 இக்காலத்தில் சைவ சமய நாயன்மார்களான கி.பி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், கி.பி 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தர மூர்த்தி நாயனாரும் அக்காலத்தில் சைவத்தின் வளர்ச்சிக்கு பல தலங்கள் சென்று அங்குள்ள மூர்த்தி தலம், தீர்த்தம் என சிறந்து விளங்கும் ஆலயத்தின் மகிமையினை நேரடியாக கண்ணுற்றும், ஞானத்தால் அகக்கண் நினைத்தும் பல பாடல்கள் பாடியுள்ளனர். எனவே சம்பந்தரும், சுந்தரரும் திருக்கேதீச்சர தலத்தை இராமேஸ்வரத்தில் நின்று கொண்டு அகக்கண்ணால் நினைத்து பாடியதாகவும் கூறப்படுகின்றது. இதனை

'.........சென்னியர்மா தோட்டத்துத் திருக்கேதீச்சரம் சார்ந்த
சொன்னமலர்மா லைகள்சாத்தித் தூரத்தே தொழுதெழுந்தார்'என சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.
அந்த வகையில் சம்பந்தர் தனது தேவாரத்தில் மாதோட்ட இயற்கை அழகினை
'கருதுன்றவூர் கனைகடற்கடிகமழ் பொழிலளி மாதோட்டம்...' எனவும்
'.....வாழையம்பொழில் மந்திகள்களிப்புற மருவிய மாதோட்டம்..'எனவும்
'.........வண்டு பண்செய்யும் மாமலர்ப்பொழின் மஞ்சை நடுமிடு மாதோட்டம்...' என பாடுவதினை நோக்க முடிகின்றது.
மேலும் சுந்தரரது தேவாரத்தில்
'....வங்கமலி கின்றகடல் மாதோட்டநன் நகரில்...' எனவும்
'...தெங்கம் பொழில் சூழுந்திருக் கேதீச்சரத் தானே' எனவும் மாதோட்டத்தின் இயற்கை அழகையும், இறைவன் கோயிலின் பெருமையினையும் பாடியமையில் இருந்து சமயநாயன்மார்கள் காலத்திலும் மன்னார் சிவபூமியில் சைவம் சிறந்து விளங்கியமையினை நோக்க முடிகின்றது.

3.2.3 தமிழக மன்னர் ஆதிக்க காலம் (கி.பி 10 – 14 ம் நூற்றாண்டு)
               தமிழ் நாட்டில் சோழப்பேரரசு எழுச்சியுற்ற காலப்பகுதியில் குறிப்பாக பிற்கால சோழ மன்னர்களான முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திரசோழன் போன்றோர் ஈழத்தைக் கைப்பற்றி பொலநறுவையை தலைநகரமாகக்கொண்டு ஆட்சி செய்த காலத்தில் குறிப்பாக முதலாம் இராஜேந்திரசோழன் ஈழத்தின் வடமேற்கு திசையில் உள்ள சிவத்தலமான திருக்கேதீச்சரத்தை வழிபட்டதாகவும் திருப்பணிகள் செய்ததாகவும் சோழர் ஆட்சி காலத்தில் இது 'இராஜராஜேஸ்வர மகாதேவன் கோயில்' என சிறப்பு பெயரைப் பெற்றது. அத்தோடு திருவிராமேஸ்வரம் எனும் ஆலயமும் இங்கு சிறப்புப் பெற்று விளங்கியது. இதனை கி.பி 11ம் நூற்றாண்டில் சோழர்களின் இரு கல்வெட்டில் 'மாதோட்டத்திலே திகழ்ந்த இராஜராஜேஸ்வரம், திருவிராமேஸ்வரம் ஆகிய இரு கோவில்கள் பற்றிய குறிப்புக்கள் காணப்பட்டதாகவும் இதிலிருந்து இக்காலத்தில் மன்னார் இப்பூமியில் சைவசமய வளர்ச்சிநிலைகள் உயர்வு பெற்றமையினை அறியமுடிகின்றது.

அத்துடன் கி.பி12ம் நூற்றாண்டில் சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் சமய நாயன்மார்களின் மகிமையை கூறும் பகுதியில் சம்பந்தரரும், சுந்தரரும் இராமேஸ்வரத்திலிருந்து அக்காலங்களில் திருக்கேதீச்சரத்தை கண்டு தோத்திரம் பாடியமையினை
'மன்னுமிரா மேச்சரத்து மாமணியை முன்வணங்கிப்
பன்ணுதமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார் பாம்பணிந்த
சென்னியர்மா தோட்டத்துத் திருக்கேதீச்சரஞ் சார்ந்த
சொன்னமலர்மா லைகள்சாத்தித் தூரத்தே தொழுதெழுந்தார்'8 எனக் கூறப்படுவதில் திருக்கேதீச்சரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் கி.பி 13ம் நூற்றாண்டில் இரண்டாம் பாண்டியப்பேரரசின் ஆதிக்கம் நிலவிய காலத்தில் முதலாம் சுந்தர பாண்டியரின் ஆதரவினையும் பெற்று வளர்ச்சி அடைந்தமையினை நோக்க முடிகின்றது. இன்றும் பாண்டியர்; மரபின் சிற்பங்கள் காணப்படுகின்றமை நோக்கப்படுகின்றது.

   அத்துடன் கி.பி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பெருமன்னர் இலங்கையின் வடபகுதிற் சிலகாலம் பெற்றிருந்த செல்வாக்கின் போது திருக்கேதீச்சர ஆலயமும் இவர்களது ஆதரவைப் பெற்று வளர்ச்சி அடைந்ததை வரலாற்றாசிரியர் கருதுவர்.

    இதன்பின்னர் கி.பி 1540 இல் மாந்தை துறைமுகத்தை சார்ந்த கடற்பிரதேசத்தில் கடல்கோள் ஒன்று ஏற்பட்டது. இதனால் திருக்கேதீச்சரத்தின் ஒரு பகுதி முற்றாக அழிவடைந்து காணப்பட்டது என்பதினை அராலி விஸ்வநாதர் சம்பவக் குறிப்பில் காணப்படுகின்றது.

3.2.4 போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் (கி.பி 15 – 18 ம் நூற்றாண்டு)

போர்த்துக்கேயர் கி.பி 1590இல் மன்னாரைக் கைப்பற்றினர். மதநடவடிக்கைகளில் மிகவும் கடும் போக்குடையவர்களாக காணப்பட்ட போர்த்துக்கேயர் மன்னார் சிவபூமியின் சைவ சுதேசிகளை கட்டாயத்தின் பேரில் மதமாற்றம் செய்வித்ததோடு இங்குள்ள சைவ ஆலயங்களையும் இடித்து தரைமட்டம் ஆக்கினர். இச்செயற்பாட்டால் திருக்கேதீச்சர ஆலயமும், திருவிராமேஸ்வரம் என்னும் ஆலயமும் முற்றாக திட்டமிட்டு அழித்தும் அவ்வாலயங்களில் இருந்த பொருட்களை சூறையாடியும் கற்களைக் கொண்டு துறைமுகம், கோட்டை முதலானவற்றைக் கட்டியதாக கூறப்படுகின்றது. இவ்வாறு சைவர்களின் வாழ்வை நிலைகுலையச் செய்தனர்.

'பனையால் விழுந்தவனை மாடேறி உழக்கியது போலவும';, 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போலவும'; போர்த்துக்கேயரின் கொடுமைகளை தாங்காத மன்னார் சைவ மக்கள் மீது அடுத்து ஒல்லாந்தரின் ஆதிக்கமும் அவர்களின் வாழ்வியலை சின்னாபின்னப் படுத்தியது. இதனால் சைவர்களின் பாரம்பரிய வாழ்வியலானது திருக்கேதீச்சரம், திருவிராமேஸ்வரம் ஆலயங்களில் அழிவோடும் நிலைகுலைந்து அழிந்து போயின. எனவே எனது நோக்கில் மன்னார் சைவசமய வரலாற்றில் இக்காலம் இருண்டகாலம் என கருதுகின்றேன்.

3.2.5 ஆறுமுகநாவலர் காலம் (19ம் நூற்றாண்டு)

        மன்னாரில் சைவ சமயமானது போர்த்துக்கேயராலும், ஒல்லாந்தராலும் அழிவடைந்து சுமார் 3 நூற்றாண்டு காலம் மண்ணுக்கடியில் அமைதியாக கிடந்தது. சைவர்களும் ஏதிலிகளாக எமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் தொலைத்து விரும்பியோ விரும்பாமலோ அந்நிய மதங்களுக்கும், கலாசாரங்களுக்கும், வாழ்வியலுக்கும் அடிமைப்பட்டிருந்தனர்.வறண்டு வாடிய எமது இனத்திற்கும், மதத்திற்கும் நல்மழையாக 19ம் நூற்றாண்டில் வந்துதித்த பெருமகனாராம் நல்லை நகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் தோன்றினார். தனது அறிவாலும், ஆற்றலாலும் அழிந்த எமது சைவத்தை மீட்டுத் தந்த உத்தமர் ஆவர்.

புனிதமிக்க தெய்வீக சிவத்தலங்கள் வழிபடும் பக்குவர்கள் அருகிய காலத்தில் மறைவதும் பக்குவர்கள் சிலரின் தவ விNஷடத்தினால் ஒரு பாகமோ முழுவதுமோ வெளிப்படுவதும் இயற்கை என்ற அறிந்தோர் கூறக்கேட்டதுண்டு.எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்து சென்ற நூற்றாண்டு மத்தியில் ஒரேயொரு ஆறுமக நாவலர் இதயத்தில் திருக்கேதீச்சர எண்ணம் கருக்கொண்டது.யாழ்ப்பாண சமய நிலை என்ற துண்டுப்புத்தகத்தின் இறுதிப் பந்தியில் பின்வருமாறு நாவலர் கூறுகின்றார்.
'சைவ சமயிகளே!, தேவாரம் பெற்ற சிவஸ்தலங்களுள் இரண்டு இவ் இலஙகையிலுள்ளன.அவைகளுள் ஒன்றாகிய திருகோணமலைக்குச் சம்பந்த மூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்றிருக்கின்றது. மற்றொன்றாகிய திருக்கேதீச்சரத்திற்கு திருஞான சம்மந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்றும், சுந்தர மூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்றும் இருக்கின்றன.இத்திருக்கேதீச்சரம் வட மாகாணத்தின் கண்ணுள்ள மன்னாருக்குஅதி சமீபத்திலிருக்கின்ற மாதோட்டத்தில் உள்ளது.இத்திருக்கேதீச்சரம் அழிந்து காடாகக் கிடக்கின்றதே! புதிதுபுதிதாக அவ்விலங்கையில் எத்தனையோ கோவில்கள் கட்டப்hடுகின்றனவே.நீங்கள் இந்த மகா ஸ்தலத்தைச் சிறிதும் நினையாத தென்னையோ!இவ்விலங்கையிலுள்ள விபூதித்தாரிகை எல்லாருஞ் சிறிதுசிறிது உபகரிக்கினும் எத்துணை பெருந்தொகைப்பொருள் சேர்ந்துவிடும்! இதை நீங்கள் எல்லீரும் சிந்தித்து இத்திருப்பணியை நிறைவேற்றுவீர்களாயின் அருட்கடலாகிய சிவபெருமான் உங்களுக்கு அனுக்கிரகஞ் செய்வார்.'9
எனக் கூறிச் சைவர்களை ஊக்கப்படுத்தினார். அத்துடன்
  'மன்னாருக்கு சமீபத்தில் உள்ள மாதோட்டத்திலே திருக்கேதீச்சரம் என்னும் தேன் பொந்து ஒன்று உள்ளது. அங்கு மருந்து ஒன்று மறைந்துள்ளது. அதனைச் சென்றடையுங்கள்'10
என்று நாவலர் பெருமான் அன்று சைவர்களுக்கு விடுத்த விஞ்ஞாபனத்துடன் சைவ சமயத்தவரவர்களுக்கு ஒளி பிறந்தது.எனவே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் காலம் மன்னார் சைவசமய வரலாற்றில் ஓரி மறுமலர்ச்சிக் காலமாகியது.
         '1894 ஆம் ஆண்டு தை மாதம் பசுபதி செட்டியர் தலைமையில் அங்கு சென்ற சைவர்கள் காடு வெட்டி கோயிலைத் தேடினர் இறைவனின் சித்தமாக மேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 10அ ஆழத்திலிருந்து பழைய கோவிலின் தீர்தக் கிணறு காணப்பட்டது.பின்னர் அக்கோயிலில் பிரதிட்டை செய்திருந்த மகாலிங்கம் சோமஸ்கந்தர் விநாயகர்இ நந்தி முதலிய விக்கிரகங்கள் கண்ணுக்கு தென்பட்டன.அவ்வாண்டு ஆவணி மாதம் பழைய கோவிலிருந்த இடத்தி;pகு ஏறத்தாழ கால்மஅ  வடக்கே சிறிய கோவில் ஒன்றினை நிறுவினர்.அக்கோவிலின் பரிபாலணம் நாட்டுக்கோட்டை நகரத்தாரிடம் இருந்தது. அவர்கள் 1903ஆம் ஆண்டு கற்கோயில் ஒன்று கட்டி கும்பாபிடேகம் செய்வித்தனர்.அன்று ராமேஸ்வரம் வழியாக காசியிலிருந்து கொணர்வித்த சிவலிங்கமுமஅன்று ராமேஸ்வரம் வழியாக காசியிலிருந்து கொணர்வித்த சிவலிங்கமும் அம்பாள் விக்கிரகமுமே இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளன.அகழ்ந்தெடுத்த சோமஸ்கந்தர் இப்பொழுதும் திருவிழாவிற்கு எழுந்தருழல் வழக்கம்.'11
தோடர்ந்து சைவ பெரியார் திருவாளர் சு.சிவபாதசந்தரனாரும் திருக்கேதீச்சரம் பதிகங்களை பதிபித்தும் மடங்களை அமைத்தும் நாவலர் விட்ட பணிகளை தொடர்ந்தும் செய்துவந்தனர்.

3.2.6 மறுசீரமைப்புக் காலம்-

        இக்காலமானது மன்னாரில் சைவசமயத்தின் வரலாற்றில் பொற்காலமென கூறலாம்.ஏனெனில் திருகேதீஸ்வரம் உட்பட மன்னார் மாவட்டத்தின் பல சைவர்கள் ஆலயத்தை மையமாக வைத்து வாழ்ந்தமை மட்டுமன்றி சமய விரதங்களையும் விழாக்களையும் கடைப்பிடித்தும் வந்துள்ளனர்.இதனால் சைவம் புதுப் பொலிவு பெற்றுக்காணப்பட்டது.குறிப்பாக திருக்கேதீஸ்வர ஆலயமானது 1944ல் ஈழத்தில் சிவனடியார் திருக்கூட்டம் என்ற சைவ அமைப்பின் பெயரில் 1948ல் ஜப்பசி 3மஇ4ம் திகதிகளில் திருக்கேதீஸ்வரத்தில் சைவ மாநாடு ஒன்றினைக் கூட்டினர்.இதனால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல சமயப் பெரியார்கள் கலந்து கொண்டு ஆலயத்தை மறுசீரமைக்க வேண்டும் எனக் கூறினர்.இதனால் 1948.அக்டோபர் 28ம் திகதி திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையை நிறுவி புனரமைப்புக்களை செய்தனர்.பிற்பட்ட சில காலங்களில் திருக்கேதீஸ்வரம் கும்பாபிடேகம் செய்யப்பட்டது
.குறிப்பாக


1956ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை திருஞான சம்மந்தர் ஆதின முன்னாள் முதல்வராக ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிக சுவாமிகளும்இ சுந்தரம் லிமிடட் உரிமையாளர்களும் கும்பாபிசேகம் செய்தனர்.
1960.ஒக்டோபர் 31ல் சிவமணி சீமான் கந்தையா வைத்தியநாகனஇ; சட்டத்தரணி திரு.எஸ்.சிவசுப்பரமணியம் ஆகியோரால் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.
1976.யூலை 4ம் திகதி திருவாளர் எஸ்.சோமசுந்தரம் சட்டத்தரணி அவர்கள்இ சிவத்தொண்டர்.இ.நமசிவாயம்அவர்களுமஇ; திரு.எஸ்.சோமசந்தரம்இ கேணல்.இரா.சபாநாயகம் முதலானோரினால் மகா குடமுழுக்கும் நடைபெற்றது.இதன் பின் அலங்காரத் திருவிழா கொடியேற்றத்திருவிழாவாகி  சிறப்பாக நடைபெற்றது.
1983ம் ஆண்டு ஜந்து திருத்தேர்களும் ஆலயத்தில் வலம்வந்தன.வைகாசி விசாகத்திலன்று நடைபெறும் பாலாவியின் தீர்த்த உற்சவம் சிறப்பானதாகும்.சிவராத்திரி விழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

      மேலும் மன்னார் சைவ சமய வரலாறானது திருக்கேதீஸ்வர ஆலயத்தோடு ஆரம்பிக்கப்பட்ட போதும் மேலும ;பல புராதன ஆலயங்கள் மன்னாரின் ஏனைய பிரதேசங்களில் தோன்றி இன்று வரை சிறப்பாக வளர்ச்சிபெற்று சைவத்தின் இருப்பை பறைசாற்றுகின்றது.அந்தவகையில் நானாட்டன் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் தலைமன்னார் முத்துமாரியம்மன் ஆலயத்தையும் குறிப்பிடலாம்.அத்தோடு பின்வரும் கிராமங்களிலுள்ள ஆலயங்களை நோக்குவோம்.

  • முத்துமாரி அம்மன் கோவில் - தலைமன்னார்(மிகப்பழமையானது).
  • காத்தாரி அம்மன் கோவில் - படப்படி - தலைமன்னார்.
  • ஸ்ரீசிவசுப்பரமணியம் ஆலயம் - (பேசாலை 95 வருடங்களிற்கு முன);.
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் - காட்டாஸ்பத்திரி (பேசாலை)
  • புத்திரகாளி அம்மன் ஆலயம் - உதயபுரம் (பேசாலை)
  • முhரியம்மன் ஆலயம் - தாராபுhம்
  • பாலமுருகன் ஆலயம் - கீரி (1984)
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் - செல்வநகர் (1940)
  • திருச்செந்தூர் முருகன் ஆலயம் - தோட்டக்காடு
  • அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஆலயம் - எழுத்தூர் (1970)
  • பிள்ளையார் கோவில் - சின்னக்கரிசல் (புராதன ஆலயம்)
  • அம்மன் கோவில – 5ம் கட்டை தலைமன்னார் வீதி.
  • ஸ்ரீபாலமுருகன் ஆலயம் - மன்னார் வைத்தியசாலை (1982)
  • ஞானவைரவர், திருமுருகன் ஆலயம் - பெரியகடை
  • சிவன்கோயில் - சாவற்கட்டு (1987)
  • ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயம் - சௌத்பார் (1966)
  • வேலமுருகன் ஆலயம் - சாந்திபுரம் (1964)
  • அம்மன் ஆலயம் - அம்மன் தோட்டம், சௌத்;;பார் (1950)
  • சித்திவிநாயகர் ஆலயம் - உப்புக்குளம் (1913)
  • இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் - உப்புக்குளம் (1913)
  • ஆலடிப்பிள்ளையார் ஆலயம் - மன்னார் நகரம் (1938)
  • அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்மன் ஆலயம் - பாலம்பிட்டி (1991)
  • பிள்ளையார் கோயில் - பாலிலுப்பட்டான்கட்டி (1996)
  • முருகன் ஆலயம் - பறப்பான்கண்டல்
  • முருகன் கோயில் - முள்ளிப்பள்ளம்
  • திருமுருகன் ஆலயம் - சிறுநாவற்குளம்
  • முனியப்பர் கோயில – மாந்தை
  • அம்மன் கோயில் - கள்ளிக்கட்டைக்காடு
  • அம்மன் கோயில் - வண்ணாமோட்டை
  • அனுமார் கோயில் - வண்ணாமோட்டை (1987)
  • சித்திவிநாயகர் ஆலயம் - இத்தியடி சின்ன பண்டிவிரிச்சான்
  • சித்திவிநாயகர் ஆலயம் - பூம்புகார்
  • ஸ்ரீமுருகன் ஆலயம் - தச்சனா மருதமடு (1957)
  • முhணிக்கவிநாயகர் ஆலயம் - வைரவப்புளியங்குளம்
  • ஐயனார் கோயில் - பாலம்பிட்டி (1875)
  • பட்டிவழி பிள்ளையார் கோயில் - பாலம்பிட்டி
  • மருதடிப்பிள்ளையார் - பாலம்பிட்டி
  • சித்திவிநாயகர் ஆலயம் - பாம்பிட்டி (1955)
  • பிள்ளையார் கோயில் - முள்ளிக்குளம் (1970)
  • குதிரைவிட்டான் பிள்ளையார் கோயில் - முள்ளிக்குளம்
  • நாகதம்பிரான் கோயில் - கங்காணிக்குளம் (1990)
  • சிவன் ஆலயம் -     இரணை இலுப்பைக்குளம் (1916)
  • சித்திவிநாயகர் ஆலயம் - பெரிய பண்டிவிரிச்சான்
  • பிள்ளையார் கோயில் - பெரிய வில்லடி (1955)
  • முனியப்பர் கோயில் - தச்சனாமருதமடு (1970)
  • விநாயகர் ஆலயம் - தச்சனாமருதமடு (1990)
  • பாலவிநாயகர் ஆலயம் -  தச்சனாமருதமடு (1951)
  • சக்தி கணபதி ஆலயம் - விளாத்திக்குளம் (1970)
  • உத்திரமாகாளி கோயில் - தச்சனாமருதமடு (1972)
  • பத்திரகாளி கோயில் - ஆவரங்கால் (1916)
  • அம்மன் கோயில் - இரணைஇலுப்பைக்குளம் (1930)
  • பிள்ளையார் ஆலயம் - இரணைஇலுப்பைக்குளம் (1916)
  • அம்மன் கோயில் - மண்கிண்டி (1916)
  • முருகன் ஆலயம் - கல்மடு (1958)
  • வீரபத்திரர் ஆலயம் - வவுனியன் பெரியகுளம் (1916)
  • பிள்ளையார் கோயில் - விளாத்திக்குளம் (1916)
  • அம்மன் கோயில் - விளாத்திக்குளம் (1930)
  • முருகன் ஆலயம் - பாசங்குளம் (1916)
  • அம்மன் கோயில் - அணைக்கல்போட்டார் குளம் (1971)
  • முருகன் கோயில் - சின்னவலயன்கட்டு (1950)
  • முத்துமாரியம்மன் கோயில் - கட்டுக்கரை முருங்கன் (1920)
  • ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் - (1954)
  • விநாயகர் ஆலயம் - செம்மண் தீவு
  • முருகன் கோயில் - முருங்கன்
  • வைரவர் ஆலயம் - கற்கிடந்த குளம்
  • வைரவர் ஆலயம்  - முருங்கன் சந்தி
  • பிள்ளையார் ஆலயம் - கட்டையடம்பன் (1977)
  • அம்மன் கோயில் - முருங்கன்
  • சனீஸ்வரன் கோயில் - கட்டையடம்பன் (1810)
  • முருகன் ஆலயம் - கட்டையடம்பன்
  • பிள்ளையார் கோயில் - சிறுகண்டல் (1975)
  • அம்மன் கோயில் - பரிகாரிகண்டல் (1937)
  • பிள்ளையார் கோயில் - வெள்ளாளர்கட்டு (1850)
  • வைரவர் கோயில் - ஆண்டாசெட்டித்தெரு
  • அம்மன்கோயில் - சிலாவத்துறை
  • அம்மன்கோயில் - அரிப்பு
  • பிள்ளையார் கோயில் - மடு வீதி
  • கஜமுகன் ஆலயம் - சிறுகண்டல் (1968)
  • கற்பக பிள்ளையார் கோயில் - கடற்கரைப்பிட்டி விடத்தல்தீவு (1922)
  • கற்பக விநாயகர் கோயில் - கள்ளியடி (1648) 
  • முத்துமாரியம்மன் கோயில் - இலுப்பைக்கடவை (1650)
  • பிள்ளையார் கோயில் - பிள்ளையார்பிட்டி, அடம்பன்
  • பிள்ளையார் கோயில் - பெரியமடு (1960)
  • சித்திவிநாயகர் ஆலயம் - பெரியமடு (1960)
  • அம்மன் கோயில் - காயாநகர் பெரியமடு (1995)
  • அம்மன் கோயில் - காயாநகர் (1977)
  • மாவடி வைரவர் ஆலயம் - பள்ளமடு (1920)
  • ஐயானார் கோயில் - வெள்ளாங்குளம் வடக்கு (1942)
  • நாச்சிம்மார் கோயில் - வெள்ளாங்குளம்
  • சந்திரசேகர பிள்ளையார் கோயில் - வெள்ளாங்குளம்
  • ஐயானார் கோயில் - வெள்ளாங்குளம் தெற்கு
  • வைரவர் கோயில் - வெள்ளாங்குளம் தெற்கு
  • முனியப்பர் கோயில் - வெள்ளாங்குளம் வடக்கு (1938)
  • முருகன் கோயில் -    வெள்ளாங்குளம் வடக்கு (1987)
  • வைரவர் கோயில் - வெள்ளாங்குளம் வடக்கு
  • பிள்ளையார் கோயில் - மூன்றாம்பிட்டி
  • முருகன் கோயில் - பாலியாறு
  • கற்பகபிள்ளையார் ஆலயம் - கோயிற்குளம்
  • நொங்குவெட்டி ஐயனார் கோயில் - கோயிற்குளம் 
  • சித்திவிநாயகர் ஆலயம் - புதுக்குளம்
  • வைரவர், பிள்ளையார் ஆலயம் - சவிரிக்குளம்
  • காளிகோயில் - ஆத்திமோட்டை (1930)
  • கற்பக விநாயகர் ஆலயம் - ஆத்திமோட்டை (1935)
  • ஐயனார் ஆலயம் - ஆத்திமோட்டை (1935)
  • பிள்ளையார் ஆலயம் - கூராய் (1971)
  • பிள்ளையார் ஆலயம் - சீதுவிநாயகர் குளம் (1960)
  • சித்திவிநாயகர் ஆலயம் - இலுப்பைக்கடவை
  • அம்மன்கோயில் - இலுப்பைக்கடவை (1995)
  • முனீஸ்வரன் ஆலயம் - இலுப்பைக்கடவை
  • பாலமுருகன் கோயில் - இலுப்பைக்கடவை (1985)
  • சித்திவிநாயகர் கோயில் - வட்டக்கண்டல்
  • விநாயகப்பிள்ளையார் கோயில் - இத்திக்கண்டல் (1980)


எனவே மேற்குறிப்பிட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள சைவ ஆலயங்களை நோக்குமிடத்து சைவர்கள் மிகப்புராதன காலத்திலிருந்து மன்னார் தீவிற்குள்ளும், பெருநிலப்பிரதேசத்திலும் செறிவாக வாழ்ந்துள்ளனர்,வாழ்கிறனர் என்பதோடுஇங்குள்ள பல ஆலயங்கள் திருக்கேதீஸ்வர புராதன ஆலயத்தோடு தொடர்புடைய காலத்தில் இருத்துள்ளது என்பதை அவ்வாலயங்களின் மிகப்பழைமையிலிருந்து அவதானிக்கலாம்.
குறிப்பாக நானாட்டான்,தலைமன்னார், இலுப்பைக்கடவை, கள்ளியடி, கோவிற்குளம், வெள்ளாங்குளம், பாலம்பிட்டி, கரிசல் முதலான இடங்களிலுள்ள ஆலயங்களை குறிப்பிட்டுக்கொள்ளலாம்.

ஆகவே இங்குள்ள மக்கள் ஆகமமுறைசார்ந்த வழிபாட்டினையும், ஆகமமுறைசாரா வழிபாட்டினையும் மேற்கொண்டதோடு சைவப்பாரம்பரியத்;தினை ஆலயத்தினூடாக பேணியமையும் நோக்கப்படுகின்றது.

3.2.7 ஈழப்போராட்ட காலம்
     இலங்கையில் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் பின்னர் கலவரங்களாக தோற்றம் பெற்று இறுதியில் ஆயுதப் போராட்டமாக முழுவடிவம் பெற்றது. இக்காலத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டு எங்கும் போர்மேகம் கொண்டு காணப்பட்டது. இக்காலத்தில் சைவ மக்கள் தமது வாழ்விடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் சென்று குடியேறியமையும் பலர் இந்தியாவிற்கும், வெளிநாடுகளுக்கும் சென்றனர்.

 இதனால் அவர்களால் ஆதரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன.

'கொடிய போரினால் திருக்கேதிச்சர ஆலயமும், அதன் அழகிய மண்டபம், மனைகள், முதியோர் இல்லங்கள், கல்லூரி, சிவன் குருகுலம், மருந்தகம், பொது நிறுவனங்கள், ஆலய உடைமைப் பொருட்கள் பஞ்சமூர்த்திகளை சுமந்து அழகே உருவம் அசைந்தாடி வீதி உலா வரும் அணிசேர் அலங்காரம் உடைய ஐந்து திருத்தேர்கள், சகடைகள், சப்பிர கேடகங்கள், தண்டிகைகள், பரிவார மூர்த்திகள், வாகனங்கள் அனைத்தும் அழிந்தும் சிதைந்தும் போயின.'12
எனவே சில இடங்களில் சைவர்கள் தற்காலிகமாக குடியேறிய இடங்களில் சில சிறிய ஆலயங்களை உருவாக்கி வழிபட்டமையினை ஆலயங்களின் பட்டியல்களை அவதானிப்பதன் மூலம் அறியலாம்.
அத்துடன் மன்னார் நகர பகுதியில் உள்ள சைவர்கள் இராணுவத்தின் அனுமதி பெற்று திருக்கேதீச்சர ஆலயத்திற்கு மிக கடுமையான சோதனைகளின் மத்தியில் சென்று வழிபட்டு வந்தனர். அத்தோடு பெரும்பாலான மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களை இழந்தமையால் பிற சமயத்தவர்கள் வாழும் இடங்களில் வாழ்ந்தமையாலும், கலப்பு திருமணங்களாலும் மன்னாரில் சைவம் கீழ்நிலைப்படத் தொடங்கியது. எனவே குறிப்பாக ஈழப் போராட்ட காலம் மன்னாரில் சைவ சமய எழுச்சிக்கு பாரிய தடையாக இருந்ததை நோக்கலாம்.

3.2.8.தற்காலம்
      இன்று மன்னாரில் சைவ சமயத்தை நோக்கும் போது சைவர்கள் பெரும்பாலும் திருக்கோவில்களை அடிப்படையாக கொண்டு வாழ்வியலை மேற்கொள்கின்றனர். அத்துடன் கோயில்களின் எழுச்சிக்கும், அவற்றின் பரிபாலிப்பிற்கும் உதவி வருவதோடு கோயில்களில் நடைபெறுகின்ற பூஜைகள், விழாக்களையும், பொதுவான சமய விரதங்களையும், பண்டிகைகளையும் செவ்வனே கடைப்பிடித்து வருகின்றனர்.
          இக்காலத்தில் சைவ சமய வளர்ச்சியானது திருக்கோயில்களை அடிப்படையாகக் கொண்டும், சைவ சமய அமைப்புக்கள், பாடசாலை, அறநெறிப் பாடசாலை, இலக்கிய முயற்சிகளினூடகவும் வளர்;க்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக கோயில்களை அடிப்படையாக கொண்ட சைவத்தின் வளர்ச்சியினை நோக்கும் போது மன்னாரில் காணப்படுகின்ற ஆலயங்களை மையமாகக் கொண்டு சைவ மக்கள் வாழ்வதோடு தமக்கென ஆலய நிர்வாகத்தையும் அமைத்து பரிபாலித்து வருகின்றனர். கோவில்களில் நித்திய பூசைகள் நடைபெறுகின்ற அதே நேரம் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் விசேட பூசைகளும் நடைபெறுகின்றன. அத்தோடு திருவிழாவும், கொடியேற்றம், அலங்கார திருவிழா என ஆலயங்களில் நடைபெறுகின்றது. பெரும்பாலான ஆலயங்களில் ஆகம முறை சார்ந்த வழிபாடுகள் அத்தணர்களால் பூஜைகளும் செவ்வனே ஆற்றப்படுகின்றது. ஆகம முறைசாரா வழிபாடாக சைவர்களால் பூசைகள் ஆற்றப்பட்டு வழிபடப்படுகின்றன.
            யுத்தம் முடிவுற்றதான தற்காலத்தில் பல ஆலயங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிNஷகம் நடைபெற்றது. கோவில்களை அடிப்படையாக கொண்ட சைவ வளர்ச்சிக்கு சிவாச்சாரியார்களின் பங்களிப்பு, பணி மிகவும் போற்றுதற்குரியது. குறிப்பாக அமரர் கலாநிதி சபா.மனோகரக்குருக்கள்,சிவஸ்ரீ.ப.கண்ணன்குருக்கள்,பிரம்மஸ்ரீ.மகா.தர்மகுமாரக்குருக்கள்,சிவஸ்ரீ.பூரண.சிவரூபக்குருக்கள்,பிரம்மஸ்ரீ.வி.பாபுக்குருக்கள்,பிரம்மஸ்ரீ.மனோ.ஐங்கரசர்மா,பிரம்மஸ்ரீ.பன்னீர் செல்வ சர்மா,பிரம்மஸ்ரீ.சோ.விக்னேஸ்வரசர்மா, பிரம்மஸ்ரீ. ஸ்ரீகாந்தசர்மா முதலானோர்களையும் இன்னும் மன்னாரில் பிற இடங்களிலும் தமது ஆலய பூஜை பணியை செவ்வனே மேற்கொண்டு சமய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்ற சிவாச்சாரியார்களும் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள்.

மேலும் தற்கால மன்னாரில் சைவ சமய வளர்ச்சியில சைவ மத அமைப்புக்களினது பணிகள் மிகவும் போற்றத்தக்கது. பல அமைப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் இன்னும் தமது சேவையை செய்யும் அமைப்புக்களாக பின்வருவனவற்றை நோக்க முடிகின்றது.

  • இந்து சமய வளர்ச்சி சங்கம்
  • இந்து ஆலயங்களின் ஒன்றியம்
  • அறநெறிப் பாடசாலைகளின் இணையம்
  • சைவ கலை, இலக்கிய மன்றம்
  • சிவபூமி இந்து இளைஞர் மன்றம்
  • கலாநிதி சபாமனோகரக்குருக்கள் நற்பணி மன்றம்
  • நலிவுற்றோர் நலன் காப்பு நிதியம்
  • இந்து முன்ணனி – பேசாலை
  • சிவ தொண்டர் அணி


என பல அமைப்புக்களும் இன்னும் சைவ சமய வளர்ச்சிக்கு கடும் பணியாற்றுகின்றன. அத்துடன் சைவ சிறார்களின் நலநோன்பு நிலையங்களாக

  • அன்னை இல்லம்
  • சிவன் அருள் இல்லம்

என்பனவற்றையும் அவற்றின் பணிகளையும் சிறப்பாக நோக்க முடிகின்றது.
                   மேலும் சைவத்தின் வளர்ச்சிக்கு பாடசாலைகளினது பங்களிப்பினை நோக்கும் போது குறிப்பாக 
மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி,
 மன்/கௌரியம்பாள் பாடசாலை,
   சைவ சமய பாட ஆசிரியர்களின் கற்பித்தலாலும் பாடசாலையின் சமய விழாக்களாலும் தற்காலத்தில் சமயம் வளர்க்கப்படுவதினை நோக்க முடிகின்றது.

     அத்துடன் சைவசமய வளர்ச்சிக்கு சைவ சிறார்களுக்கு சமய பாடத்தினை கற்பிப்பதும், அவர்களின் கலாசாரங்களையும் பண்பாட்டையும் பேணும் முகமாக அறநெறிப் பாடசாலைகள் ஆலயத்தினூடக வளர்க்க்ப்படுவதினையும், அவற்றினை கட்டுக்கோப்பாக வழிநடத்துகின்ற அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தின் பணியையும் குறிப்பிடலாம். மேலும் மன்னாரினை இன்றும் அழிந்து போகாது பாதுகாக்கும் பொருட்ட சமய நிறுவனஙடகளிற்கூடாகவும்,தனி மனிதர்களாகவும் நின்று எமது பாரம்பரியத்தினை,கலாசாரத்தினை,பண்பாட்டினையும் பேணிக்காத்து இன்று வரை வழிநடத்துகின்ற மன்னார் சைவ மத பெரியவர்களான உயர்திரு அ.திருநாவுக்கரசு, டாக்டர் மு.கதிரகாமநாதன், எஸ்.எஸ்இராமகிருஸ்ணன்,.எஸ்பிருந்தாவனநாதன்,வெ.பொ.மாணிக்கவாசகர்;, திரு.வி.செல்வரெட்ணம், திரு.ஆ.ஐ.தயானந்தராஜா, டாக்டர் அரசக்கோன், பிரம்மஸ்ரீ மஹா.தர்மகுமாரகுருக்கள், பிரம்மஸ்ரீ மனோஐங்கரசர்மா, பிரம்மஸ்ரீ பாபுக்குருக்கள், திரு.சி.கிருபானந்தன், திருமதி பு. மணிசேகரம், திரு எஸ்.சண்முகலிங்கம்,திரு.ம.நடேசானந்தன்,எஸ்.றமேஸ்,சூரியகுமார்,இ.பாலஸ்கந்தவேல்,கணேசலிங்கம்(சொக்கன்).சந்திரகாந்தன்,.செல்வக்குமரன், .செல்வராசா,.வரதன்,, போன்றோரும் இன்னும் பல பெயர் குறிப்பிடப்படாத சைவ சமய பெரியவர்களும் ஊரிடை பூத்த சிறு மலர் போன்று பணியாற்றுபவர்களும், அரசஉத்தியோகஸ்தரும்,மன்றங்களின்உறுப்பினர்கள், தொண்டர்களென பலரது அயராத உழைப்பினால் இன்னும் எமது மதம் காக்கப்படுகிறது.
                அத்துடன் இக்காலத்தில் சைவ சமய இலக்கிய முயற்சிகளாக சைவமக்களிற்கும், சைவச்சிறுவர்களிற்கும் கூறும் பொருட்டு பேசாலை இந்து முன்னணியினால் அன்னை பத்திரிகையும், திரு.எஸ்.றமேஸ் அவர்களினால் இந்துதீபமும் வெளிவந்து பின் இவை மக்களின் ஆதரவின்மையால் தடைப்பட்டது.மேலும் திரு.க.சிவம் அவர்களினால் ஆலயத்தின் பக்திபாமாலையும் திரு.எஸ்.முத்து அவர்களால் தற்போது வெளிவரும் பக்திவிஜயமும் திரு.எஸ்.ஜெகனின் உலகஆரம்பமும் மன்னார்மாவட்டமும், திரு.கு.கனகசபாபதி அவர்களின் திருக்கேதீஸ்வரவரலாறும் பன்னிருதிருமுறைகள் என்ற நூலும் இக்கால இலக்கிய முயற்சிகளாகும்.இவை மேலும் வளர வேண்டும் என்பதே எனது பேரவா.
                    இதுமட்டுமன்றி இன்று எமது சைவ சமயமானது பிறமத ஆதிக்கத்தினால் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றது. குறிப்பாக திட்டமிட்ட குடியேற்றம், திருச்சொரூபங்களின் தாபிப்பு, வரலாறுகளை புரட்ட முனைதல், கலப்புத்திருமணம், அடக்குமுறைகள், பிறமதகப்பிரச்சாரம், கலப்புக் குடியிருப்பு, உரிமைகள் மறுப்பு, எனப் பல கோணங்களிலும் தற்போது சவால்கள் நிறைந்துள்ளது. நான் முன் குறிப்பிட்டவாறே உண்மைகளை எவராலும் மறைக்கவும் முடியாது, உண்மைகள் ஒருபோதும் உறங்கவும் மாட்டாது.
'சத்தியம் என்றும் தரணியில் சாதிக்கும் வெல்லும்' எனவே ஒரு இனத்தினது இருப்பானது அதன் தாய்மொழியிலும், தாய்மதத்திலுமேயே தங்கியுள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு இன்று அனைத்து மன்னார் வாழ் சைவ மக்களும் சுயநலம் கருதாது தன்புகழ் பாராது நான் பெரியவன் என்ற இழிசிந்தனையை தூரவிலக்கிவிட்டு எல்லாப் புகழும் சிவபரம்பொருளுக்கே எனக்கருதி  'மக்கள் சேவையே மகேசன் சேவை' எனக்கொண்டு ஒன்றுபட்ட மதமாக ஒரு சிந்தனையில் நின்று எமது சமயத்தின் சவால்களை எதிர்கொள்வோம் என சிவலோக வாழ்வின் நித்திய புருஷர் கலாநிதி.சபா.மனோகரக்குருக்களின் குருபூஜை தினமாகிய இன்று எமது உள்ளத்தில் திடசங்கர்ப்பம் பூணுவோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
நன்றி.





உஷhத்துணை நூல்கள்-

     1 இலங்கையில் இந்து சமயம் -   பேராசிரியர்.சி.பத்மநாதன்
     அகில இலங்கை இந்துமாமன்றம்
     குமரன் புத்தக இல்லம்
      2005
2 சைவநெறி தரம் 10      – கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
        1999


3 மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி – நாற்பதாண்டு நிறைவுவிழா வெழியீடு
                            1999

4 திருக்கேதீஸ்வர வரலாறும் பன்னிரு திருமுறைகளும் - குருசாமி கனகசபாபதி

5 உலக ஆரம்பமும் மன்னார் மாவட்டமும் - திரு.எஸ். ஜெகன்
                               நானாட்டான்
                               2012.

     

'மன்னாரில் சைவ சமய வரலாறும் அதன் வளர்ச்சியும்' (ஒரு சுருக்கநோக்கு) Reviewed by NEWMANNAR on March 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.