அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபையின் உப தலைவரினால் முன் வைக்கப்பட்ட 3 கோரிக்கைகளுக்கும் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றம்.

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எதிரான வன்முறை,
உதயன் பத்திரிகைக்கு எதிரான வன்முறை,முஸ்லிம் மக்களின் உரிமை மறுப்பு ஆகியவற்றிற்கு எதிராக மன்னார் பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு கண்டனத்தீர்மானங்கள் ஏக மனதாக நிiவேற்றப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.


 மன்னார் பிரதேச சபையின் 24 ஆவது சபைக்கூட்டம் கடந்த 11 ஆம் திகதி இடம் பெற்ற போது குறித்த மூன்று பிரச்சினைகள் தொடர்பாக உப தலைவர் அந்தோனி சகாயம் கண்டன தீர்மானத்தை முன்வைத்தார். இதன் போது சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

 தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிரான வன்முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனது காரியாலயத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையில் அங்கு அத்துமீறி நுழைந்த வன்முறையாளர்கள் அலுவலகத்தின் மீதும் அங்கு கூடியிருந்த மக்கள் மீதும் கற்களை வீசி தகாத வார்த்தைகளால் மக்களை ஏசியுள்ளார்கள்.

 இது ஒரு அனாகரிகமானதும்,அராஜகரமான ஒரு செயலுமாகும்.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது ஏவி விடப்பட்ட அடாவடித்தனமாகும். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று சொன்னால் அங்கு கருத்துச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் எல்லோருக்கும் உண்டு.அதை அடக்கு முறையினால் யார் தடுக்க முயன்றாலும் அது தவறானது.

 துர்ப்பாக்கியம் என்னவென்றால் கூட்டத்திற்குப்பாதுகாப்பு வழங்க வந்த பாதுகாப்புப்படையினர் இதனை பார்த்தும்,மௌனமாக நின்று கொண்டிருந்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் தமது கடமையில் இருந்து தவறியிருக்கின்றார்கள் என்பதே பொருள்படும்.

 இதனை எமது சபை வன்மையாகக் கண்டிப்பதோடு இது போன்ற செயல்கள் இனிமேல் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 உதயன் பத்திரிகைக்கு எதிரான வன்முறை. 

 ஒரு ஜனநாயக நாட்டின் முதுகெலும்பு ஊடகங்கள் தான். ஊடகங்கள்,பத்திரிக்கைகள் சிறப்பாக இயங்குகின்றது என்றால் அங்கு கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பது அர்த்தம். ஆனால் சமீப காலங்களாக தமிழ் ஊடகங்களின் அலுவலகங்களும்,ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

 தொடர்ந்தும் உதயன் பத்திரிக்கையின் அலுவலகங்கள் தாக்கப்பட்டு வருகின்றது.இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த வன்முறைகளை மேற்கொண்டவர்கள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதன் மூலம் தான் இவ்விதமான நிகழ்வுகள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க முடியும். தமிழ் ஊடகங்களை இலக்கு வைத்து நடாத்தப்படுகின்ற இத்தாக்குதல்கள் தமிழர்களை நோக்கியதான வன்முறை என்று பொருள் கொள்ள முடியும்.

 ஆகவே இது போன்ற வன்செயல்கள் தவிர்க்கப்படுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என இச்சபையை கேட்டுக்கொள்ளுகின்றேன்.

  முஸ்லிம் மக்களின் உரிமை 

மறுப்பு பொது பல சேனாவின் மற்றுமொருஅடாவடித்தனம்

பள்ளிவாசல்களை மூடுமாறும்,அவ்விதம் மூடாது விட்டால் பலவந்தமாக மூடப்படும் என்று பயமுறுத்துவது ஒரு நாகரிகமான அல்லது ஜனநாயகமான செயலாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 இந்த நாடு தான் விரும்பிய கல்வியை தொடர,தான் விரும்பும் தொழிலை செய்ய,தான் விரும்பும் பெண்னை திருமணம் செய்ய ,தான் விரும்பிய மொழியினை பேச பல்வேறு சுதந்திரத்தை மதிக்கின்ற,ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு நாடு. சட்ட வரையரைகளுக்கு உட்பட்டு செயற்படுகின்ற எந்த நடவடிக்கையையும் யாரும் தடுக்க முடியாது.

 எனவே முஸ்லிம் மக்களின் உரிமைகளை மறுக்கச் செய்யும் எந்த ஒரு விடயங்களுக்கும் நாங்கள் இடமளிக்காது இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.என்ற 3 கண்டனங்கள் சபையில் உப தலைவர் அந்தோனி சகாயத்தினால் முன் வைக்கப்பட்டது.இதன் போது கண்டனத்தீர்மானம் சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மன்னார் பிரதேச சபையின் உப தலைவரினால் முன் வைக்கப்பட்ட 3 கோரிக்கைகளுக்கும் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றம். Reviewed by NEWMANNAR on April 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.