அண்மைய செய்திகள்

recent
-

கடலுக்கடியில் ஓய்வெடுக்கும் மலேசிய விமானம்: நிரூபிக்க தயாராகும் விமானப்படை தளபதி

மலேசிய விமானத்தின் முடிவு மிக குறுகிய காலத்திற்குள் தெரிந்துவிடும் என்று அவுஸ்திரேலிய குழுவுக்கு தலைமை தாங்குகிற ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் தெரிவித்துள்ளார். மார்ச் 8ம் திகதி மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ‘எம்எச் 370’ பீஜிங் சென்றபோது நடுவானில் அதிகாலை 2.40 மணிக்கு மாயமானது. 

 விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதிக பணச்செலவில் அந்த விமானத்தை தேடும் வேட்டை நடந்து வருகிறது. அந்த விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து திட்டவட்டமான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அந்த விமானம், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்திருக்கலாம் என்று மலேசிய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

 இந்நிலையில், விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வருகிற ஒலியைக்கேட்டு, அது இருக்கிற இடத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும் ‘டோவ்டு பிங்கர் லொக்கேட்டர்’ என்னும் கருவிகளை ஓஸன் ஷீல்டு என்னும் அவுஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ’ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் இழுத்துச்சென்று தேடுகின்றன. 

 மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியானது என கருதப்படுகிற ‘பிங்’ சமிக்ஞைகள் கடந்த 5ம் திகதி 2 முறை கிடைத்தது. தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையும் இரு முறை கிடைத்துள்ளது. இந்த 4 சமிக்ஞைகளுமே மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து மாயமான விமானத்தை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய குழுவுக்கு தலைமை தாங்குகிற ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் பெர்த் நகரில் நேற்று கூறுகையில், எனக்கு இப்போது திடமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒன்று, மாயமான மலேசிய விமானத்தை நாங்கள் கண்டுபிடிப்போம் அல்லது அந்த விமானத்துக்கு நேர்ந்தது என்ன என்பதை கண்டறிவோம். 

 இதற்கு அதிக காலம் ஆகாது. ஒரு சில நாட்களில் இது தெரிந்துவிடும். மாயமான விமானம், கடலுக்கு அடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் உறுதி செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இதேபோன்று அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமை கமிஷனர் மார்டின் தோலன் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இன்னும் நெடிய தூரம் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் விமானத்தை தேடும் வேட்டையில் இதற்கு முன்பு இருந்ததை விட இப்போது சாதகமான அம்சங்கள் உள்ளன என கூறியுள்ளார்.
கடலுக்கடியில் ஓய்வெடுக்கும் மலேசிய விமானம்: நிரூபிக்க தயாராகும் விமானப்படை தளபதி Reviewed by NEWMANNAR on April 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.