Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

கனடாவில் தலைகளை வெட்டும் மர்ம இடம்! பாதாள உலகத்தில் நரகத்திற்கான பாதையா?


இன்றைய நவீன உலகிலும் விடை கூற முடியாத அல்லது விடைகள் மறைக்கப்படும் பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் மர்மங்களும் ஒரு வகையில் சுவாரசியம் மிக்கவை.

நாகானி எனப்படும் பள்ளத்தாக்கு கனடா மெக்கன்சீ மலைத்தொடரில் அமைந்துள்ளது. குறித்த பகுதியில் மலைக்கு கீழே பல சுரங்கப்பாதைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

அது மட்டுமல்லாது அடர்ந்த காட்டுப்பகுதியாக இருக்கும் குறித்த பகுதிக்கு செல்லும் மனிதர்கள் தலை துண்டிக்கப்பட்டு சடலங்கலாக மீட்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆனாலும் மேலோட்டமான ஆராய்வுகளே இடம் பெற்றுள்ளன. முழுக்காட்டினையும் முழுமையாக ஆராய அனுமதி வழங்கப்படுவதில்லை.


இந்தக்காட்டுப் பகுதியில் விலங்குகள் வாழ்ந்து வருகின்றன, என்றாலும் இங்கு நுழையும் மனிதர்களின் தலைகள் மட்டுமே துண்டிக்கப்படுகின்றன.

விலங்குகள் தாக்கி இவை நடந்திருக்கலாம் என்றால் அதற்கான சாத்தியப்பாடுகள் மிகமிகக் குறைவு எனவும் தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

அதன் காரணமாக அங்கு பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக அல்லது ஒரு மர்ம கலாச்சாரத்தைக் கொண்டு வாழும் இனம் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அது மட்டுமல்லாது கனடாவின் ரொரன்டோ பகுதியில் காணப்படும் நிலக்கீழ் பகுதி ஒன்றின் மேற்புறத்தில் அதி கூடிய காந்தப்புல விசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஆனாலும் அந்த காந்தப்புலத்திற்கான விடை இன்று வரை கூறப்படவில்லை. மேலும் Gerrard and Church பகுதியில் அதிகளவான வாகன விபத்துக்கள் இடம் பெறுகின்றன.

அதற்கு காரணம் அப்பகுதியில் நிலத்திற்கு கீழே அதிக காந்தப் புல விசை காணப்படுவதாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இவ்வாறாக நிலக்கீழ் பகுதிகளின் மர்மங்கள் உலகம் முழுவதும் இன்றும் தொடர்கின்றன. அந்த வகையில் எகிப்து நாட்டில் Cairo பகுதியில் காணப்படும் சுரங்கப்பாதைகளை ஆராய அனுமதி கொடுக்கப்படுவதில்லை.


ஆனாலும் குறித்த சுரங்கப்பாதைகளில் வேற்றுக்கிரகவாசிகளின் வருகை காணப்படுவதாகவும் அதனாலேயே ஆய்வுகள் முடக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிக்கோ Mictlan பகுதியில் மூடப்பட்ட ஒரு சுரங்கப்பாதை உள்ளது. நரகத்திற்கான பாதை எனப்படும் இந்த சுரங்கப்பாதையின் மர்மமும் கூட இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

பிரேசிலின் Joinville எனும் மலையடிவாரங்களில் பல சுரங்கப்பாதைகள் காணப்படுகின்றன. ஒரு சில காலத்தில் அங்கு இசைச்சப்தம் கேட்பதாகவும் கூறப்படுகின்றது ஆனாலும் முழுமையான ஆய்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இமயமலைக்கு கீழேயும் நிலக்கீழ் நகரம் இருப்பதாகவும் இதற்கு இந்தியாவின் பல பகுதிகளில் சுரங்கப்பாதைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

அவற்றில் ஒன்று எல்லோரா குகைக்கு அருகே பல மர்மமான துவாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சிற்பங்கள் நிலக்கீழ் நகரை கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஆதாரங்கள் காரணமாக நிலக்கீழ் மர்ம கலாச்சாரம் இருப்பதாகவே ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பரிமாணத்தில் மாறுபட்ட ஒரு இனம் அற்கு வாழ்வதாக கூறப்படுகின்றது.

அப்படி என்றால் அவர்கள் யார்? பூமிக்கு கீழேயும் பூமியின் மேற்பரப்பில் இருப்பதை விடவும் 3 மடங்கு அதிக நீர் இருக்கலாம் என ஆய்வாளர் Steve Jacobsen என்பவர் ஆய்வுக்குழு அறிவியல் அறிக்கை விடுத்துள்ளது.

அப்படி ஒரு நிலக்கீழ் மர்ம நாகரீகம் வாழ்கின்றதா? ஆய்வுகள் மட்டும் ஏன் மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு விடயத்தையும் அறிவியலாக பார்த்து.,

தர்க்க ரீதியிலும் ஆய்வு ரீதியாகவும் பதில் கூறும் நவீன உலகம் ஏன் இவற்றை இன்றும் மர்மமாக வைத்துள்ளது. இந்தக் கேள்விகளுக்கு கூடிய விரைவில் பதில்களைத் தேடலாம்.
 
தாக்கத்தை ஏற்படுத்திய உலக தலைவர்கள் பட்டியலில் ட்ரம்ப், மோடி....


உலக அளவில் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான டைம்ஸ் வெளியிட்டுவருகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டும் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில் உலக அளவில் நூறு தலைவர்களின் பெயர்கள் இடம்பெறும். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டுக்கான தலைவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அந்த பட்டியலில் உலக தலைவர்களின் பெயர்கள் இடம் பெறச்செய்து அது இணையதளத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படும்.

இணையதள வாக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தற்போது வெளியிடப்பட உள்ள பட்டியலில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, சீன அதிபர் ஜீ ஜின்பிங், மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய சுனாமி


செவ்வாய் கிரகத்தின் மீது பாரிய விண்கல் ஒன்று மோதியதில் செவ்வாயில் மிகப் பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டதாக விண்வெளி ஆராச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் பாரிய விண்கல் ஒன்று மோதியதில் உருவான மிகப் பெரிய பள்ளத்தை அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பேசிய ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடலில் 150 மீற்றர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாகவும் உப்புடன் கூடிய தண்ணீரும் ஏனைய சிதைகளும் நீண்ட தரை பகுதி நோக்கு பரவியது.

செவ்வாய் கிரகம் வறண்ட மற்றும் எதுவும் இல்லாத தரையாக இருக்கும் என நாம் அறிந்திருந்தாலும் அங்கு மிகப் பெரிய கடல் பிராந்தியம் இருந்திருந்தால், அதனை சார்ந்து வாழ்ந்த உயிரினங்களும் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கனடா வீதியில் சிதறிக்கிடந்த பணம் நிரம்பிய கடித உறைகள்!


கனடாவின் நோவ ஸ்கோசியா அனரிகோனிஷ் என்ற பகுதியில் நகரம் முழுக்க காசு திணிக்கப்பட்ட கடித உறைகள் சிந்தி கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோவ ஸ்கோசியா அனரிகோனிஷ் பகுதியில் கிட்டத்தட்ட 100 உறைகள் வரை நகரின் எல்லைக்குள் கிடந்துள்ளன. அவைகளின் உள்ளே 5 முதல் 50 டொலர்கள் வரையிலான பணம் திணிக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனை கண்ணுற்ற அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டபோது “அற்புதமான அறக்கட்டளை” எனப்படும் ஒரு உலகளாவிய நிறுவனத்தின் முன் முயற்சி என தெரியவந்துள்ளது.

இவர்கள் மாதந்தோறும் “மைக்ரோ- மானியம்” எனப்படும் இத்திட்டத்தை வெவ்வேறு திட்டங்களிற்காக வழங்குகின்றனர்.

இப்பணத்தை பெறுபவர்கள் அதனை ஒரு செயலிற்காக உபயோகிப்பார்கள் என தாங்கள் நம்புவதாக அறங்காவலர் ஷான் வில்கி தெரிவித்தார்.

இவைகளை தாங்கள் வெளிப்படையான அல்லது மறைமுகமான இடங்களில் சென்று மறைத்து வைக்கப்போவதாகவும் இவற்றை கண்டு பிடிப்பவர்கள் சிலருக்கு உண்மையிலேயே சிறந்த சிலவற்றை செய்வார்கள்.

பணத்தை பெறுபவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அப்பணத்தை முன்நோக்கி செலுத்த முயல்வார்கள் என தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.

சமூகம் தமக்கு வழங்கும் நன்கொடையை இந்த முயற்சிக்காக மாதந்தோறும் 1,000 டொலர்களாக விட்டு விடுவோம. இதன் மூலம் தங்கள் திட்டம் திரும்ப சமுதாயத்திற்கே இப்பணத்தை திரும்ப கொடுக்கின்றதெனவும் கூறினார்.

இத்திட்டத்தின் பிரகாரம் சனிக்கிழமை நோவ ஸ்கோசியாவின் அன்ரிகொநிஷ் ரவுனை சுற்றி பிரகாரமான இளஞ்சிவப்பு நிற கடித உறைகள் “OPEN ME.” என்ற ஸ்டிக்கர்களுடன் சிந்தி விடப்பட்டிருந்தது.

இதற்குள் 5, 10 அல்லது 20டொலர்கள் தாள் காணப்படுவதுடன் இதனை முன்நோக்கி கொடுக்கவும் என்ற சிறு குறிப்பும் வைக்கப்பட்டிருக்கும்.

பிரித்தானியாவில் தரைமட்டமான கட்டிடம்: 15 பேர் காயம்....


பிரித்தானியாவில் கேஸ் வெடி விபத்தால் 15 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் நியூபெர்ரி பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்து கேஸ் வெடி விபத்தால் தான் ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து இன்னும் சரிவர தெரியவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகை கதிகலங்க வைத்துள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்....


உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஒரு படி மேல் சென்று புதிய ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருக்கின்றன.

குறிப்பாக இராணுவ பலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஆயுத உருவாக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளன.

மேலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வல்லரசு நாடுகளுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்த வேண்டி தேவையும் இருக்கின்றன.

கடந்த காலங்ளில், சீனா, ரஸ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் புதிய ஆயுதங்களை உருவாக்குவதிலும், கொள்வனவு செய்வதிலும் அவதானம் செலுத்தியுள்ளது.

Electromagnetic Railgun tested at Dahlgren"s new Terminal Range
இந்நிலையில், தற்போது அமெரிக்கா புதிய ஆயுதம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த ஆயுத உருவாக்கத்தினால் உலக நாடுகள் பலவும் கதிகலங்கி போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், மின் காந்த அலை ஆயுதம் (எலக்ரோ மெக்னடிக்) ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுதம் குண்டுகளை வெளியிடுவதில்லை. மாறாக மின் காந்த அலைகளை குண்டுகளை போல வெளியிடக்கூடியது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒலியை விட 6 மடங்கு வேகத்தில் செயற்பட கூடிய இந்த ஆயுதம் சுமார் 100 மைல் வரை சென்று தாக்குதல் மேற்கொள்ள கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆயுதத்தின் மூலம் இரும்பை கூட துளைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேரலையாக சென்று தாக்க கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின் காந்த அலைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம் காற்றோ அல்லது ஏனைய மூலக் கூறுகளோ தடுக்க முடியாது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வரலாறு காணாத வெப்பம்! எச்சரிக்கைவிடுத்துள்ள உலக வானிலை....


வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 இலட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது.

மேலும், 2017 இல் வலுவான எல் நினோ விளைவு இல்லை என்றாலும் உலகில் ஏற்படும் மாற்றங்கள் வானிலை அமைப்பின் செயல்பாடுகள் புரிந்து கொள்வதற்கு சவாலாக உள்ளது.

இது பற்றிய ஆய்வை கூட செய்ய முடியாத ஒரு நிலையில் உள்ளோம், விளைவுகளை கணிக்க முடியாத பிரதேசத்தில் இருக்கிறோம் என வெப்ப நிலை குறித்து உலக வானிலை எச்சரித்துள்ளது.

அண்மையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் இவ்வருடம் 50 சதவீதத்தால் அதிகரிக்குமென, அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

எல்நினோ எனப்படும் காலநிலை மாற்றத்தால், மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் அதிகளவான வெப்ப தாக்கம் இருக்குமெனவும், அதனால் அளவுகடந்த வறட்சி, மழை வெள்ளம் ஏற்படுவதற்கு சாதகமாக அமையுமென அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க இலங்கை அரசின் திட்டம்! ஐ.நாவில் குமுறல்


இலங்கை விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் நடந்த உள்நாட்டுச் சண்டையில், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.

கொத்துக் குண்டுகளை எறிந்து, தமிழினத்தைக் கூண்டோடு அழித்த இலங்கை இராணுவத்தின் 'மனித உரிமை மீறலை' சர்வதேச நாடுகள் கண்டித்தன.

2009-ல் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, இனப்படுகொலை குறித்த விசாரணை ஐ. நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.

அதில், 'சர்வதேச நீதிபதிகளைக்கொண்டு இலங்கையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்' என்று 2015-ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தை இதுவரை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை.

அதுமட்டுமன்றி, 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு ஆண்டுகளில் மறுவாழ்வு மற்றும் உரிமைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்' என்ற தீர்மானத்தின் கால அவகாசமும் இந்த மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 34-வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில், மறுவாழ்வு மற்றும் உரிமைகள் குறித்த தீர்மானத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கோரும் தீர்மானத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் கொண்டு வந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ் ஈழ ஆதரவாளர் என்ற முறையில் இயக்குநர் கௌதமனுக்கு ஐ.நா அழைப்பு விடுத்திருந்தது.

ஐ.நா-வின் அழைப்பை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்றுள்ள கௌதமனை தொடர்பு கொண்டு பேசினோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தில் என்ன நடந்து வருகிறது? யார் யார் பங்கேற்றுள்ளார்கள்?

உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் உரிமைகள் கிடைப்பதற்கு, 2015 -ல் இருந்து 2017-வரையிலான கால அவகாசத்தை இலங்கைக்குக் கொடுத்தது ஐ.நா மன்றம்.

ஆனால், அவற்றை செய்யாமல் இருக்கிற இலங்கையின் நடவடிக்கை குறித்து, மனித உரிமைகள் ஆணையம் பொதுச் சபைக்கு முதலில் எடுத்துச் செல்ல வேண்டும்.

பிறகு பாதுகாப்பு சபைக்கு சென்றவுடன் வாக்கெடுப்பு நடைபெறும். அப்படி நடக்கும்போது, நமது தமிழ் இனத்துக்கு நீதி கிடைக்கும் சூழல் உருவாகும்.

ஆனால், அப்படியான சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கவே இலங்கைக்கு ஆதரவாக அவகாசம் கோரும் தீர்மானத்தை பிரிட்டனும், அமெரிக்காவும் கொண்டு வந்துள்ளன.

இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கை அரசு அவர்களுக்கு சாதகமாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து கொள்ளும்.

அமெரிக்காவும் பிரிட்டனும் மிகப்பெரிய திட்டத்தோடுதான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த கால அவகாசம் மூலம் தனக்கெதிரான ஆதாரங்களை அழித்துக்கொள்ளும் இலங்கை அரசு.

மேலும், தமிழர்களை ஒடுக்குவதற்கும் இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தில் நீங்கள் பேசிய அம்சம் என்ன?

இலங்கையில் இதுவரை நடந்த இனப்படுகொலைகள் மற்றும் தமிழ் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்துப் பேசினேன்.

அதில், ஐ.நா-வின் உள்ளக விசாரணை அறிக்கையின் படி பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டது நிரூபணமாகி இருப்பதை சுட்டிக்காட்டினேன்.

இனப் படுகொலைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், இலங்கையிடம் இருந்து தமிழர் வாழும் பகுதிகள் பிரிந்து சென்றால் மட்டுமே சாத்தியமாகும். அப்படி பிரிந்து செல்வதே சரியான தீர்வாகவும் இருக்கும்.

ஏற்கெனவே, போர்க்குற்ற நடவடிக்கைகளை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை நியமிக்காமல் தவிர்த்து வருகிறது இலங்கை அரசு. இந்த நிலையில் மேலும் கால அவகாசம் கொடுப்பது நல்லதல்ல என்றேன்.

இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள் ஏதாவது பேசினார்களா?

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தப் போரை இந்தியா தான் நடத்தியது' என்று சொன்னபோது மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி இருவரும் மௌனியாக இருந்தனர்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதும், 'இந்தப் போரை நடத்தியது இந்தியாதான்' என்று சொன்னார்.

அப்போதும்கூட சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூவரும் அமைதியாகவே இருந்தனர்.

'இலங்கைக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வரவேண்டும்' என்று தமிழக அரசு சொன்ன போதும் அப்போதைய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது இந்தியப் பிரதிநிதியாக இங்கே வந்துள்ளவர்கள் இந்த கால அவகாசம் கோரும் தீர்மானத்துக்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை..

இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொண்டு வரப்பட்டதற்கான எந்த மாற்றுக் கருத்தும் சொல்லப்படவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆனால் ஈழத்தில் இருந்து வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே கடுமையாக எதிர்த்தனர்.

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதன் விளைவு என்னவாக இருக்கும்?

இனப்படுகொலை விசாரணையை நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலைகளை நெட்வொர்க் அமைத்து செய்து வருகிறது இலங்கை அரசு.

இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்திருப்பது இலங்கை அரசு செய்துள்ள அனைத்துக் குற்றங்களுக்கான ஆதாரங்களையும் அழிப்பதற்கான அவகாசமாக அமைந்துவிடும்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்கான வழிவகைகள் இதுவரை செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.

அதுமட்டுமின்றி எஞ்சிய தமிழர்களை அழிப்பதற்கான அவகாசமாக இலங்கை அரசு இதனைப் பயன்படுத்தும்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை தமிழ் எம்.பி தலைவரான சுமந்திரன், 'எங்களுக்கு தனி நாடு தேவையில்லை. இந்தக் கால அவகாசத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்' என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி சம்பந்தன், சேனாதிராஜா போன்றோர் சிறிசேன அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள தமிழ் ஈழ உணர்வாளர்கள் ஒற்றுமையில்லாமல் செயல்பட்டு வருவதும் இனப்படுகொலையில் நீதி கிடைப்பதில் பின்னடைவு ஏற்படக் காரணம்.

ஐ. நா மன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்து?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை மனிதத்தை கொல்கிறது. அநீதிக்கு ஆதரவாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இது கண்டனத்துக்கு உரியது.

மனித குலம் மன்னிக்கவே முடியாத வேலைகளையும் ஐ.நா செய்து வருகிறது. இந்த கருத்தை அவையிலேயே பதிவு செய்துள்ளேன்.

ஜல்லிக்கட்டு அனுமதி கோரி எழுந்த எழுச்சியைப் போன்று இனப்படுகொலைக்கு எதிரான எழுச்சியை மாணவர்களையும், ஈழ உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்து நடத்துவேன்.

இந்த எழுச்சி அலை என்பது தமிழனின் வீரத்தையும் அறத்தையும் பறைசாற்றும் வகையில்அமையும். என்றார்.

இளைஞராக போனவர் திருநங்கையாக திரும்பினார்: அதிர்ச்சி சம்பவம்


தமிழ்நாட்டில் இளைஞராக இரு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் திருநங்கையாக பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமரை செல்வன், இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

அவரின் இளைய மகன் முத்துகுமார் (20), அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2015 மார்ச் மாதத்தில் முத்துகுமார் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட பொலிசார் அவரை தேடி வந்தனர்.

தற்போது இரண்டு வருடங்கள் கழித்து முத்துகுமார் சென்னையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சென்னைக்கு சென்று பொலிசார் முத்துகுமாரை பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். காரணம் அவர் ஆப்ரேஷன் செய்து முழு திருநங்கையாக மாறியிருந்தார்.

தன் பெயரை கீர்த்தனா என மாற்றியுள்ளார். பின்னர் ஊருக்கு அழைத்து செல்லப்பட்ட அவரை கண்டு அவர் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் முத்துகுமார் நீதிமன்றத்தில், நான் திருநங்கையாக சென்னையில் வாழவே விரும்புகிறேன்.

அவ்வபோது பெற்றோரை வந்து திருப்பூரில் பார்த்து செல்கிறேன் என கூறியுள்ளார். அவர் விருப்பத்துக்கு நீதிமன்றம் சம்மதித்துள்ளது.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புகளை துரிதப்படுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது!

பிரித்தானியா மனித உரிமைப்பேரவையின் ஒரு அங்கத்துவ நாடு என்ற வகையிலும், 30/1 என்ற பிரேரணையின் இணை அனுசரணையாளர் என்ற வகையிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சும், அட்வக்கேசி குழுவும் இணைந்து தமிழ் மக்களுக்கான நீதியை கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் தொடர் சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான நகுலேஸ்வரன் சிவதீபன் Harrow West இற்கான பாராளுமன்ற உறுப்பினர் Mr.Gareth Thomas ஐயும், லச்சுமன் தெய்வேந்திரன் Tooting இற்கான பாராளுமன்ற உறுப்பினர் Dr. Rosena Allin-Khan ஐயும், கிஷ்ணமூர்த்தி ஜனார்த்தனன் Enfield & Southgate இற்கான பாராளுமன்ற உறுப்பினர் Mr.David Burrowes ஐயும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.


இச்சந்திப்பில், சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும் எனவும் உள்நாட்டு விசாரணை எல்லாவற்றையும் மூடி மறைக்கும் இலங்கை அரசின் ஒரு கண்துடைப்பு நிகழ்வே என்பதும் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் இலங்கை அரசாங்கம் தம்வசம் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை முழுமையாக விடுவிக்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

வடகிழக்கில் நிலை பெற்றுள்ள இராணுவத்தினர் குறைக்கப்படவில்லை. யுத்தத்தின் போது இடம்பெயர்ந்துள்ள மக்களிற்கான மீள்குடியேற்றம் பூர்த்தியாக்கப்படவில்லை என்பனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னாள் போராளிகளுக்கும், அரசியல்கைதிகளுக்கும் புனர்வாழ்வு என்ற பெயரில் விச ஊசி ஏற்றியமை தொடர்பாகவும், மர்மமான மரணம் பற்றி ஒரு நீதி விசாரணையின் முக்கியத்துவம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

நல்லாட்சி என்று தம்மை தாமே சொல்லுகின்ற அரசாங்கத்தின் ஆட்சியிலும் தொடர்கின்ற கைதுகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், சித்திரவதைகள், காணாமல் போனோர் விவகாரம், அரசியல் போர்க் கைதிகளின் விடுதலை போன்ற சமகால பிரச்சனைகளையும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துக்கூறினார்கள்.

இந்த கலந்துரையாடலில் ஈடுபட்ட அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையடப்பட்ட விடயங்களை பிரித்தானிய பிரதமர், மற்றும் வெளிவிவகார அமைச்சரிடமும் கொண்டு சேர்ப்பதாக உறுதியளித்ததுடன் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களுக்கு தமது ஆதரவு எப்போதும் உண்டு என்பதையும் தெரிவித்தனர்.

அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த சந்திப்புகள் தெடர்ச்சியாக இடம்பெறும் என இந்த செயற்பாட்டை முன்னின்று நடாத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அட்வகேசி குழு உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கி 304 பேரை பலிகொண்ட கப்பல்: தூக்கி நிறுத்தம்


தென்கொரியாவில் கடலில் மூழ்கி 304 பேரை பலிகொண்ட கப்பல் கடலுக்கு அடியில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் திகதி மாணவ, மாணவிகள் பலர் உல்லாசப்பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென்று கப்பல் ஜிண்டோ தீவில் உள்ள கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இதில் குழந்தைகள் உட்பட சுமார் 304 பேர் உயிரிழந்தனர். அந்த கப்பல் விப்பத்துக்குள்ளான நிலையிலே கடலுக்கு அடியில் சென்றுவிட்டது. இதன் எடை 6 ஆயிரத்து 825 டன்.


கடலுக்குள் மூழ்கிய இந்த கப்பலை தூக்கி நிறுத்தி மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் அதற்கான நடவடிக்கையை அந்த நாட்டு அரசு மேற்கொண்டது.

அதன் விளைவாக கடுமையான முயற்சிக்குப்பின்னர் அந்த கப்பல் இப்போது கடலுக்கு அடியில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டு விட்டது.

இதில் நூற்றுக்கணக்கான சீன தொழிலாளர்கள் ஈடுபட்டதாகவும், அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இக்கப்பல் இன்னும் 2 வாரங்களில் துறைமுகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

கனடாவில் 7.5 மில்லியன் தொழிலாளர்கள் தமது வேலையினை இழக்கும் அபாயம்!


கனடாவில் எதிர்வரும் ஆண்டுகளில் 1.5 மில்லியன் தொடக்கம் 7.5 மில்லியன் வரையிலான தொழிலாளர்கள் தமது வேலையினை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தன்னியக்கமாக்கல் முறைமையினாலேயே குறித்த தொழிலாளர்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய வேலைவாய்ப்பு மற்றும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்காக தயாரிக்கப்பட்ட ஆவணங்களிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பல தொழிற்துறைகளில் வேலைப்பழுவை குறைப்பதற்கும், வேலையினை இலகுபடுத்துவதற்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் பலர் தனது வேளையினை இழக்கின்றனர்.

மகளைக் கழுத்தறுத்து கொன்று உடலை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை....


இந்தியாவில் தந்தை ஒருவர் தனது மகளை கொன்று காதலனின் வீட்டு வாசலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தனது காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் வீட்டில் இருக்க சிறுமியின் தாய் திடீரென வீட்டில் நுழைந்து அதிரச்சியடைந்துள்ளார்.

பின்னர், சிறுவனை பொலிசில் ஒப்படைத்துள்ளார். இச்சம்பவத்தை அறிந்த சிறுமியின் தந்தை, வீட்டிற்கு வந்த மகளின் கழுத்தறுத்து உடலை காதலனின் வீட்டு வாசலில் வீசியுள்ளார்.

தற்போது, பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இருவர் குடும்பமும் முஸ்லிம் மதத்தினராக இருந்தாலும் ஒரே சமூகப்பிரிவை சேர்ந்வர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் நம்பிக்கை படி ஒரே சமூகப்பிரிவில் திருமணம் செய்யக்கூடாது என்பதாகும்.

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு..! 2 பேர் பலி


பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாராளுமன்ற வளாகத்தின் வெளியே நடந்த இந்த சம்பவத்தில் இரு நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு, பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த சம்பவம், துப்பாக்கிசூடு எனவும், இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் Scotland Yard தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எவ்வாறாயினும், பாராளுமன்ற வளாகத்துக்குள் கத்தியோடு ஒருவர் இருந்ததை பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, பிரித்தானிய பாராளுமன்றின் ஒட்டுமொத்த வளாகமும் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க யுத்தக் கப்பலை தகர்த்து எறிந்த வட கொரியா...


வட கொரியா யுத்த விமானங்கள், அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றை முற்றாக தாக்கி அழிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதனை வட கொரியா நாட்டின் ஜனாதிபதி வெளியிட்டுள்ளதாகவும், இந்த வீடியோ நிஜமான வீடியோ இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசகார கப்பலை, எவ்வாறு தாக்குவது என்றும். அதில் உள்ள பாதுகாப்பு , ஆயுதங்களை எவ்வாறு செயல் இழக்கச் செய்வது என்றும் இந்த வீடியோவில் காண்பித்துள்ளார்கள்.


இந்த நடவடிக்கையானது அமெரிக்காவை மேலும் ஆத்திரமடைய வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட கொரியா நாட்டின் ஜனாதிபதி வீடியோவை தேசிய தொலைக்காட்சிகளில் எல்லாம் போட்டு மக்கள் மத்தியில் பெரும் கை தட்டலையும் வாங்கியுள்ளார்.

நிஜத்தில் இவை எல்லாம் நடக்குமா என்பது கேள்விக்குறியே. ஆனால் வீடியோவிலாவது இப்படி போட்டு காட்டி வட கொரியா மகிழ்ச்சியடைந்துள்ளதோடு அமெரிக்காவை பதட்டப்படவைத்துள்ளது.

ஒரு வயது குழந்தை உட்பட 24 மணி நேரத்தில் மூன்று கொலைகள்! யார் காரணம்? பிரித்தானியாவில் கொடூரம்


பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு வயது குழந்தை Gabriel சுத்தியலால் கொடூர முறையில் தாக்கப்பட்டு உயிருக்கு போராடினார். அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரை கொலை செய்தது அவரின் தந்தை தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

அதைத் தொடர்ந்து மறுநாள் பிற்பகலில் அதே வடக்கு லண்டனின் ஹாக்னி பகுதியில் 20 முதல் 29 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக 28 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அன்று இரவு பார்கிங் பகுதியில் இளம் வயது வாலிபர் ஒருவர் மர்மான முறையில் தலையில் குண்டடி பட்டு கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்வம் தொடர்பாக 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மேலும் 24 மணி நேரத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ள சம்பவம் லண்டன் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தந்தை: நீதிமன்றத்தில் கூறிய அதிர்ச்சி காரணம்...


அவுஸ்திரேலியாவில் தந்தை ஒருவர் மனைவிக்கு முன் 3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

பெர்த் நகரத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளியான 43 வயதான எட்வர்ட் ஹெர்பர்ட் நீதிமன்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவத்தன்று பகல் முழுவதும் மது அருந்திய ஹெர்பர்ட், அதன் பின் கஞ்சா அடித்துள்ளார்.

பின்னர், நள்ளிரவு மனைவியை கொன்றுவிடுவேன் என மிரட்டிய ஹெர்பர்ட் 3 வயது குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனையடுத்து, 7 வயது குழந்தையின் உடலிலும் பெட்ரோல் ஊற்றியுள்ளார்.

உடனே அண்டை வீட்டுக்காரரான டேனியல் மேக்மில்லன் என்பவர் ஹெர்பர்ட் வீட்டில் நுழைந்து உதவியுள்ளார்.

அப்போது, குழந்தை அழகாக இருந்ததால் கொளுத்தியதாக டேனியலிடம் கூறிய ஹெர்பர்ட், அது என் குழந்தை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என டேனியலையும் மிரட்டியுள்ளார்.

இதில் குழந்தையின் முகம் மற்றும் உடலின் மேல் பகுதியில் பயங்கர தீ காயம் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹெர்பர்ட், சம்பவத்தின் போது போதையில் தான் பைத்தியம் போல் இருந்ததால், இது குற்றம் இல்லை என நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இந்நிலையில், நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

44 பயணிகள் பரிதாப பலி....சூடானில் விபத்துக்குள்ளான விமானம்.....


தெற்கு சூடானில் விமான விபத்து நடந்துள்ளது. இதில் 44 பயணிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு சூடானில் சுப்ரீம் ஏர்லைனர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் பயணம் செய்த 44 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்து இந்த விபத்து நிகழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 


விமானத்தில் உயிருக்கு போராடிய 262 பயணிகள்....


பிரித்தானியாவின் லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென்று ஏற்பட்ட தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் எந்த ஒரு விபரீதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பிரார்த்தனை செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் இருந்து போலாந்தின் ரிஷிசவ் பகுதிக்கு போயிங் 767 என்ற விமானம் சென்றுள்ளது.

இந்த விமானத்தில் சுமார் 262 பயணிகள் மற்றும் 10 விமான பணியாட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் விமான புறப்பட்டுச் சென்ற போது திடீரென்று தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதாவது விமானத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் தரும் கருவி செயல் இழந்துவிட்டதால், விமானத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்துள்ளது.

இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவர்களுக்கு விமானத்தில் அவசர கால கட்டத்தில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த அவர்கள் எப்படியாவது நல்ல நிலையில், விமான தரையிரங்கிவிட வேண்டும் என்றும் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கு தொடர்ந்து பிரார்த்தனை செய்த படியே இருந்துள்ளனர்.

அதன் பின்னர் விமானம் பத்திரமாக நெதர்லாந்தில் உள்ள அம்ஸிடர்ம் விமானநிலையத்தில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதில் பயணிகள் அனைவருக்கும் எந்த காயங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

நடுக்கடலில் படகு மீது துப்பாக்கி சூடு: பரிதாபமாக பலியான 42 அகதிகள்...


சோமாலியா நாட்டில் இருந்து புகலிடம் கோரி கடல் வழியாக புறப்பட்ட படகு மீது ஹெலிகொப்டர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 42 அகதிகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்த யுத்தத்தில் இருந்து உயிர் பிழைத்து தப்பிக்கும் மக்கள் அண்டை நாடுகளில் குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியாவை சேர்ந்த 150 அகதிகள் படகு ஒன்றில் செங்கடல் வழியாக புறப்பட்டுள்ளனர்.

ஏமன் நாட்டிற்கு அருகே சுமார் 30 கி.மீ தொலைவில் படகு வந்தபோது திடீரென ஒரு வானில் ஹெலிகொப்டர் பறந்துள்ளது.

பின்னர், படகு மீது ஹெலிகொப்டர் குண்டு மழை பெய்துள்ளது. படகில் இருந்த் அகதிகள் அலறியடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடியுள்ளனர்.

’நாங்கள் அகதிகள்.....எங்களை சுடாதீர்கள்’ என சிலர் விளக்குகளை கைகளில் ஏந்திக் காட்டியுள்ளனர். இதை பார்த்த ஹெலிகொப்டர் துப்பாக்கி சூட்டை நிறுத்தியுள்ளது.

மேலும், சவுதி அரேபியாவை சேர்ந்த கூட்டுப்படை இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

படகு கரைக்கு திரும்பியதும் அதில் ஒருவர் மீது ஒருவராக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சடலங்கள் கிடந்துள்ளது. இத்தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

நடுக்கடலில் அகதிகளின் படகு மீது நிகழ்ந்த இந்த தாக்குதலுக்கு ஐ.நா சபை கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Photos