அண்மைய செய்திகள்

recent
-

இன ஒடுக்கு முறைக்காக பாடுபட்ட நெல்சன் மண்டேலாவின் முதலாவது ஆண்டு நினைவு தினம்


தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முதலாவது ஆண்ட நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது இன ஒடுக்கு முறைக்காக பாடுபட்ட நெல்சன் மண்டேலாவை நினைவு கூரும் முகமாக பிரார்த்தனை நிகழ்வுகளும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியொன்றும் நடைபெற்றன.


பிரெட்டோரியா நகரில் தேசிய விடுதலை வீரர்களுக்கான சுதந்திர பூங்கா கட்டடத்தில் நெல்சன் மண்டேலாவை நினைவு கூரும் முகமாக விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அங்கு உரையாற்றிய இனத்துவ தலைவர் ரொன் மார்ட்டின் மண்டேலாவாலேயே 25 வருட ஜனநாயகம் சாத்தியமாகியுள்ளது என்று கூறினார்.

மேலும் 5 மீற்றர் உயமான நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலைக்கு மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

மடிபா (நெல்சன் மண்டேலா) உடல் மறைந்த போதும் அவரது ஆத்மா ஒரு போதும் மாறாது என அவரது மனைவி கிரகா மாசல் தெரிவித்தார். அவர் நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலைக்கு பாரிய வெள்ள மலர்களாலான மலர் வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதே சமயம் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் ஸுமா பீஜிங் நகரிலுள்ள தஸிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் நெல்சன் மண்டேலாவின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

அதே சமயம் நோபல் பரிசு வென்ற தென் ஆபிரிக்க பேராயர் டெஸ்மண்டுட்டு உரையாற்றுகையில் நெல்சன் மண்டேலாவை முன்னுதாரணமாக சமூகம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இன ஒடுக்கு முறைக்காக பாடுபட்ட நெல்சன் மண்டேலாவின் முதலாவது ஆண்டு நினைவு தினம் Reviewed by NEWMANNAR on December 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.