அண்மைய செய்திகள்

recent
-

உப்பு தலையிடியை தூண்டிவிடுமா?

உப்பு நுகர்வை குறைத்தால் தலையிடியை மூன்றில் ஒருபங்கு குறைக்க முடியும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உப்பு நுகர்வை நாளொன்றுக்கு 3 கிராமாக குறைத்தால், தலையிடி பெருமளவு குறையும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

3 கிராம் உப்பு அரைதேக்கரண்டி அளவாகும். உப்பு நுகர்வை குறைக்கும்போது இரத்த அழுத்தம், இதய துடிப்பு அழுத்தம் குறைவதால் தலையிடி குறைகின்றது எனஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உப்பு நுகர்வை நாளொன்றுக்கு 9 கிராமிலிருந்து 3 கிராமாக குறைத்தபோது, தலைவலி 31 சதவீதம் குறையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜோன் கொப்லின் பல்கலைக்கழகத்தின் லோறன்ஸ் அப்பீல் என்பவர் 'குறைந்தசோடியம் எடுத்தல் தலை வலியை குறைக்கும். ஆனால் உணவு முறைகளை மாற்றுவதால் தiயிடி குறையாது' என்று கூறியுள்ளார்.

இரத்த அழுத்தம் சாதாரண அளவில் இருந்தாலும் இரத்த அழுத்தத்தை குறைப்பதால், தலையிடிவருவதை குறைக்கலாம்.
உப்பை குறைக்கும்போது, இரத்தஅழுத்தம் குறைகின்றது. இதனால் பாரிசவாதம், மாரடைப்புவரும் ஆபத்துக்களும் குறைகின்றன. குறையும்.

'மருத்துப்பெட்டியை திறக்க முன்னர் நாம் ஏன் சுகவீனமுற்றோம் என யோசிக்க வேண்டும். அநேமாக இது வாழ்கை முறைமாற்றம், உணவுபழக்கத்தால் வந்ததாக இருக்கும்'என கதரின் ஜென்னர் எனும் மருத்துவர் கூறியுள்ளார். 

உப்பு தலையிடியை தூண்டிவிடுமா? Reviewed by NEWMANNAR on January 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.