அண்மைய செய்திகள்

recent
-

கடந்த ஆட்சியில் அடாவடித்தனமாக செயற்பட்ட மக்கள் பிரதி நிதிகளை மீண்டும் அவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது- அந்தோனி சகாயம்.- Photos



கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் சரியான தீர்ப்பு நாட்டின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையினையும் நல்லுறவினையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அரசியல் ரீதியாக சுதந்திரமாக சிந்தித்து செயற்பட்டு ஆட்சி மாற்றத்திற்காக உழைத்த எம் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச சபையின் இவ்வருடத்திற்கான முதல் கூட்டம் நேற்று முந்தினம் வியாழக்கிழமை மன்னார் பிரதேச சபையில் இடம் பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,

கடந்து போன ஆட்சியில் தமிழ் மக்களுக்கு தமிழ் பிரதேசங்களில் அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் அரசியல் ரீதியாக நாம் நசுக்கப்பட்டு இருந்ததை புரிந்து கொண்ட தமிழ் சமூகமாக ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தமை தமிழ் பேசும் மக்களின் அரசியல் பலத்தையே காட்டி நிற்கின்றது.

இந் நிலையில் புதிய அரசோடு நாம் பயனிக்க இருக்கின்றோம்.

இவ்வாறான அரசியல் பயனத்தில் கடந்து போன ஜனநாயகமற்ற ஆட்சியில் அடக்கு முறையில் வாழ்ந்த நாம் மீண்டும் அதே பாணியில் பழக்கப்படாமல் எமது மாவட்டத்தின் அபிவிருத்தியில் பங்கெடுப்பது அவசியம்.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் தான் தோன்றித்தனமாக நடை பெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பாக பொறுப்பான அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை,நகர சபை எந்தவொறு அரசியல் தலையீடுகள் இன்றி செயற்படுவதற்கு வழிவகுக்க வேண்டும்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள்,அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் மக்களின் பிரதி நிதிகள் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கடந்த மாகாண சபை தேர்தலுக்குப்பின் கூட்டப்படாமல் உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த வித அரசியல் தலையீடுகளும் இன்றி உடனடியாக கூட்டம் கூட்டப்பட்டு மாவட்டத்தின் பல தேவைகள் பூர்த்தியாக்கப்படல் வேண்டும்.

வெளி மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்தில் காணிகளை அதிகளவில் வாங்குவது தொடர்பாக பிரதேச சபை தனது சுய அதிகாரத்தை எந்த விதத்திலும் அரசியல் தலையீடுகள் இன்றி செயற்பட வேண்டும்.

மேலும் தமது சொந்த அரசியலுக்கும்,தேவைக்கும் அரசாங்க திணைக்களங்கள்,மற்றும் கட்டிடங்களை பயன்படுத்துவது தொடர்பாக அரசியல் தலையீடுகளை புறக்கணித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயற்பட வேண்டும்.மேலும் ஒரு அமைச்சு சார்ந்த விடயங்கள் அந்த அமைச்சுக்கு பொறுப்பான விடயங்களில் மாத்திரம் தலையிட வேண்டும்.

கடந்த ஆட்சியின் போது அடாவடித்தனமாக செயற்பட்ட மக்கள் பிரதி நிதிகளை அதே பாணியில் செயற்படவோ அல்லது செயற்படுத்தவோ நாம் சந்தர்ப்பங்களை வழங்க கூடாது.

மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளில் எமக்கும் பங்குண்டு என்பதனை அறிந்து கொண்ட மக்களாக செயற்பட்டு புதிய அரசோடு இணைந்து நாம் அரசியல் ரீதியாக நிரந்தர தீர்வுக்காக சிந்திக்க வேண்டும்.என தெரிவித்தார்.



கடந்த ஆட்சியில் அடாவடித்தனமாக செயற்பட்ட மக்கள் பிரதி நிதிகளை மீண்டும் அவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது- அந்தோனி சகாயம்.- Photos Reviewed by NEWMANNAR on January 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.