அண்மைய செய்திகள்

recent
-

த்ரிஷா – வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது


த்ரிஷா – வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது
முன்னணி நடிகையான த்ரிஷாவிற்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

த்ரிஷாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

1999-ல் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட த்ரிஷா, 2002 இல் ‘மவுனம் பேசியதே’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, ஜெயம் ரவி, விஷால் என பெரிய கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்தி படமொன்றிலும் நடித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், த்ரிஷாவுக்கு திடீரென திருமணம் முடிவாகியுள்ளது.

தயாரிப்பாளர் வருண் மணியனை மணக்கிறார். இவர் தமிழில் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ படங்களை தயாரித்துள்ளார். தொழில் அதிபராகவும் உள்ளார்.

த்ரிஷா-வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் நடைபெற்றது.
த்ரிஷா – வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது Reviewed by NEWMANNAR on January 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.