அண்மைய செய்திகள்

recent
-

வாகனம் மற்றும் இயந்திர உபகரணங்கள் வழங்கலில் மாந்தை மேற்கு பிரதேச சபை புறக்கணிப்பு

அண்மையில் 06ம் திகதி கொழும்பில் வைத்து மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனம் மற்றும் இயந்திர உபகரணங்களில் மாந்தை மேற்கு பிரதேச சபை மாவட்ட மற்றும் மாகாண உள்ளுராட்சித் திணைக்களங்களினாலும் மத்திய அமைச்சினாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் தெரியவருகின்றது.

மன்னார் மாவட்டத்தின் முழுநிலப்பரப்பில் ழூன்றில் இரண்டு2/3 நிலப்பரப்பினை மாந்தை மேற்கு பிரதேச சபை நிர்வாகப்பபரப்பாகக் கொணடுள்ளது. அத்தோடு மடு, மாந்தை மேற்கு என இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டமைந்ததாகவும் மாந்தை மேற்கு பிரதேச சபை அமைந்துள்ளது. அத்தோடு நூற்றுக்கு 100 வீதம் கிறவல் மற்றும் மண்ணினாலான வீதிகளைக் கொண்டவையாகும்.

முற்றுமுழுவதுமாக இடம்பெயர்ந்து சொத்துக்கள் அழிந்து மீள்குடியேறிய ஒரு பிரதேசமாகும். வழங்கப்பட்ட இயந்திர உபகரணங்களில் எதுவும் இப்பிரதேச சபைக்கு வழங்கப்படவில்லை, மாறாக ஒரு எல்ப் வாகனம் ஒன்றே வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புறக்கணிப்பு தொடர்பாக சபையின் தலைவர் மற்றும் செயலாளருடன் தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவர்களது தொடர்பு கிடைக்கப்பொறவில்லை.

மன்னார் மாவட்டத்திற்குக் கிடைக்கப்பெற்றவை.
முசலி பிரதேச சபை.
Motor Grader.-  01, 
Short wheel Crew cap-01, 
Road Roller-01.

மன்னார் பிரதேச சபை.
  Motor Grader.- 01, 
Short wheel Crew cap-01, 
Road Roller-01.

நானாட்டான் பிரதேச சபை.
Water Bowser-01, 
Short wheel Crew cap-01, 
Road Roller-01.

மன்னார் நகர சபை.
Water Bowser-01, 
Short wheel Crew cap-01,

மாந்தை மேற்கு பிரதேச சபை.
Long wheel crew cap -01..
வாகனம் மற்றும் இயந்திர உபகரணங்கள் வழங்கலில் மாந்தை மேற்கு பிரதேச சபை புறக்கணிப்பு Reviewed by NEWMANNAR on February 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.