அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டானில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளை கொண்ட குளியலறை மற்றும் மலசல கூட தொகுதி ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்ட நிலையில்.-Photos



இலங்கை அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதி உதவியுடன் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையினால் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் நவீன வசதிகளைக்கொண்ட குளியலறை  மற்றும் மலசல கூட தொகுதிகள் அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக நானாட்டான் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டு ஒரு வருடங்களை கடக்கின்ற நிலையில் குறித்த தொகுதி மூடப்பட்ட நிலையில் உள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளன

சுமார் 49 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த நவீன வசதிகளைக்கொண்ட குளியலறை மற்றும் மலசல கூட தொகுதி அமைக்கும் வேலைத்திட்டம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் கடந்த 23-05-2013 அன்று ஆரம்பிக்கப்பட்டு 22-11-2013 அன்று நிறைவடைந்தது.

மக்களின் பயன்பாட்டிற்காக நானாட்டான் பிரதேச சபையிடம் குறித்த மலசல கூட தொகுதி கையளிக்கப்பட்டு சுமார் ஒரு வருடங்களை கடக்கின்ற போதும் மக்களின் பாவனைக்கு பயண்படுத்தாது மூடப்பட்ட நிலையில் பற்றைகள் வளர்ந்த நிலையில் காணப்படுகின்றது.

நானாட்டான் பஸார் பகுதியில் பொது மலசல கூடம் குளியல் அறை ஆகியவை இல்லாமையினால் தூர இடங்களில் இருந்து நானாட்டான் பகுதிக்குச் செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நானாட்டான் பகுதியில் அமைக்கப்பட்டது போன்று மன்னார் மற்றும் ஏனைய பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் குறித்த நவீன வசதிகளைக்கொண்ட குளியலறை  மற்றும் மலசல கூட தொகுதிகள் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

அவை உடனடியாக மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.எனவே நானாட்டான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நவீன வசதிகளைக்கொண்ட குளியலரை மற்றும் மலசல கூட தொகுதியை திறந்து மக்களின் பயண்பாட்டிற்கு விட நானாட்டான் பிரதேச சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நானாட்டான் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மன்னார் நானாட்டானில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளை கொண்ட குளியலறை மற்றும் மலசல கூட தொகுதி ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்ட நிலையில்.-Photos Reviewed by NEWMANNAR on March 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.