அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான தனியார் பஸ் சேவைகள் பணிப்பகிஸ்கரிப்பு-பயணிகளின் நலன் கருதி அரச பஸ்கள் சேவையில்-பா.டெனிஸ்வரன்.-Photos



மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினருக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக பிரச்சினை காரணமாக மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான தனியார் சேவைகள் நேற்று வெள்ளிக்கிழமை(27) மற்றும் இன்று சனிக்கிழமை(28) ஆகிய இரு தினங்கள் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சேவைகள் அறிவித்தல் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இலங்கை அரச போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

-இவ்விடையம் தொடர்பாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் அனுமதிப்பத்திரம் உள்ள பேரூந்து ஒன்றினை சுமார் ஒரு மாத காலம் காரணம் இன்றி நிறுத்தி வைத்ததன் பின்னர் சம்பந்தப்பட்ட உரிமையாளர் எழுத்து மூலமான அறிவித்தலை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சராகிய எனக்கும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் தேசிய போக்குவரத்து ஆணையத்துக்கும் எழுத்து மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசச்செயலகத்தில் கடந்த புதன்கிழமை(25 இடம் பெற்ற விசேட போக்குவரத்து ஒன்று கூடலின் நிறைவில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரயாடப்பட்டது.

அதன் போது அரசாங்க அதிபரினால் ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ளமை குறித்து மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

பின்னர் கடந்த 26 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்ட பேரூந்தை உடனடியாக சேவைக்கு விடுமாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரும் மன்னார் அரசாங்க அதிபரும் உத்தரவு பிறப்பித்ததை ஏற்றுக்கொண்ட தனியார் பேரூந்து சங்கம், இன்று சனிக்கிழமை(28) காலை முதல் மீண்டும் யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேரூந்துகளை நிறுத்தி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் வீதியூடாக பயணம் செய்யும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்ததாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மக்களின் போக்குவரத்தையும்,மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை(28) அவசர கலந்துரையாடல.; இடம்பெற்றது.

இதில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மற்றும் வட பிராந்திய இலங்கை அரச போக்குவரத்து சேவையின் முகாமையாளர் முஹமட் அஸ்ஹர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கள் மேற்கொண்டு வரும் இவ்வாறான பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடாது என்னும் நோக்கோடு யாழ்ப்பாணத்துக்கு இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலையினூடாக தற்காலிகமாக சேவையை வழங்க முடிவெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று சனிக்கிழமை(28) முதல் மக்களுக்கு பாதகமற்ற வகையில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அரச பேரூந்துகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவித்தார்.




மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான தனியார் பஸ் சேவைகள் பணிப்பகிஸ்கரிப்பு-பயணிகளின் நலன் கருதி அரச பஸ்கள் சேவையில்-பா.டெனிஸ்வரன்.-Photos Reviewed by NEWMANNAR on March 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.