அண்மைய செய்திகள்

recent
-

கிரேக்க பிர­தமர் பதவி வில­கு­வ­தாக அறி­விப்பு,,,


கிரேக்கப் பிர­தமர் அலெக்ஸிஸ் தஸி­பிராஸ் பதவி வில­கு­வ­தாக அறி­வித்­துள்­ள­துடன் முன்­கூட்­டியே தேர்­தல்­களை நடத்­து­வ­தற்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

கடந்த ஜன­வரி மாதம் பிர­த­ம­ராக தெரி­வு­செய்­யப்­பட்ட அவர், ஐரோப்­பிய கடன் வழங்­கு­னர்­க­ளி­ட­மி­ருந்­தான மூன்­றா­வது கட்ட பொரு­ளா­தார மீட்பு நிதி­யு­த­வியை தக்க வைத்­துக்­கொள்­வ­தற்கு தேர்­தல்­களை நடத்த வேண்­டிய தார்­மீக கடமை தனக்­குள்­ள­தாக கூறினார்.

தேர்தல் தினம் இது­வரை நிர்­ண­யிக்­கப்­ப­டாத போதும், எதிர்­வரும் செப்­டெம்பர் 20 ஆம் திகதி மேற்­படி தேர்­தல்கள் நடை­பெற வாய்ப்­புள்­ள­தாக ஆரம்ப கட்ட அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

தஸி­பிராஸ், எதிர்­வரும் தேர்­தலில் இட­து­சாரி சிரிஸா கட்­சிக்குத் தலைமை தாங்­க­வுள்ளார்.

எனினும் அவர் பொரு­ளா­தார மீட்பு நிதி­யு­தவி தொடர்­பான கடு­மை­யான பொரு­ளா­தார கொள்­கை­களால் சின­ம­டைந்­துள்ள கட்சி உறுப்­பி­னர்கள் சில­ரி­ட­மி­ருந்து கடும் எதிர்ப்பை எதிர்­கொண்­டுள்ளார்.

கிரேக்­க­மா­னது ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றங்கள் அங்­கீ­காரம் வழங்­கி­ய­தை­ய­டுத்து பொரு­ளா­தார மீட்பு நிதி­யு­த­வியில் 13 பில்­லியன் யூரோ பெறு­ம­தி­யான பகு­தியை வியா­ழக்­கி­ழமை பெற்றுக் கொண்­டது.

இது கிரேக்­கத்­திற்கு ஐரோப்­பிய மத்­திய வங்­கிக்கு செலுத்த வேண்­டிய 3.2 பில்­லியன் யூரோ பெறு­ம­தி­யான கடனை மீளச் செலுத்­து­வ­தற்கு வழி­வகை செய்­வ­தாக உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இதன் மூலம் அந்­நாட்­டிற்கு பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டி­யொன்றை தவிர்ப்­பது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.

அந்­நாடு மொத்த பொரு­ளா­தார மீட்பு நிதி­யு­த­வி­யான 86 பில்­லியன் யூரோ பெறு­ம­தி­யான தொகையை எதிர்வரும் 3 வருடங்களுககு மேற்பட்ட காலப் பகுதியில் பெறவுள்ளது.
தஸிபிராஸ் தனது இராஜினாமா கடிதத்தை வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி புரோகோபிஸ் பவ்லோபோலஸிடம் கையளித் துள்ளார்.

கிரேக்க பிர­தமர் பதவி வில­கு­வ­தாக அறி­விப்பு,,, Reviewed by Author on August 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.