அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாராபுரம் ஜின்னா கரப்பாந்தாட்ட அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.-Photos


மன்னார் மாவட்டத்தில் உள்ள கரப்பந்தாட்ட அணிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் மன்னார் தோட்டவெளி சென்.பீற்றர்ஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று நேற்று (2) ஞாயிற்றுக்கிழமை மாலை தோட்டவெளி சென்.பீற்றர்ஸ் கரப்பந்தாட்ட மைதானத்தில் அதன் தலைவர் ஏ.ரி.லுஸ்ரின் தலைமையில் இடம் பெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை 31 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டியில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 16 கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டது.

இறுதி சுற்றிற்கு தோட்டவெளி சென்.பீற்டர்ஸ் விளையாட்டுக்கழகமும்,தாராபுரம் ஜின்னா விளையாட்டுக் கழகமும் தெரிவாகியது.

போட்டிகள் மாலை 5 மணிக்கு ஆரம்பமானது. முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் கடுமையாக மோதி தலா இரு வெற்றிகளை பெற்று சம நிலைக்கு வந்தது.

ஐந்தாவது சுற்று பலத்த மோதலாக இடம் பெற்றது.இறுதியில் தாராபுரம் ஜின்னா விளையாட்டுக்கழகம் 3-2 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று வெற்றிக்கேடையத்தை சுவீகரித்துக்கொண்டது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை,மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாசன் குரூஸ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன்,பிரபல வர்த்தகர் சாள்ஸ் நிர்மலநாதன்,மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.வி.பர்சுக்,பிரதேச விளையாட்டு அதிகாரி ஏ.ஜெரோமி ஆகியோர் கலந்து கொண்டு இருதிச் சுற்றில் முதலாம் இடத்தைப்பெற்ற தாராபுரம் ஜின்னா விளையாட்டுக்கழகம் மற்றும் இரண்டாம் இடத்தைப்பெற்ற தோட்டவெளி சென்.பீற்றர்ஸ் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றிற்கான வெற்றிக்கேடையங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

குறித்த போட்டியானது அகில இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் விதி முறைகளுக்கு அமைவாக இடம் பெற்றதோடு பிரதான நடுவராக அகில இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் மத்தியஸ்தர் பாலித பெரேரா கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















மன்னார் தாராபுரம் ஜின்னா கரப்பாந்தாட்ட அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.-Photos Reviewed by NEWMANNAR on August 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.