அண்மைய செய்திகள்

recent
-

உளவு பார்ப்பதில் அமெ­ரிக்கா,,,



அமெ­ரிக்­கா­வா­னது ஜப்­பானைச் சேர்ந்த சிரேஷ்ட அர­சி­யல்­வா­திகள், மத்­திய வங்­கியின் உயர்­மட்ட அதி­காரி மற்றும் மிட்­ஸு­பிஸி குழுமம் உள்­ள­டங்­க­லான பிர­தான கம்­ப­னிகளை உளவு பார்த்­த­தாக நேற்று வெள்­ளிக்­கி­ழமை வெளி­யா­கி­யுள்ள விக்­கிலீக்ஸ் ஆவ­ணங்கள் தெரி­விக்­கின்­றன.


அமெ­ரிக்­காவால் ஜப்­பானில் உளவு பார்க்­கப்­பட்ட குறைந்­தது 35 இலக்­கு­களின் பட்­டி­யலை விக்­கிலீக்ஸ் வெளி­யிட்­டுள்­ளது.

மேற்­படி விக்­கிலீக்ஸ் இணை­யத்­த­ள­மா­னது அமெ­ரிக்­காவின் உளவு இர­க­சி­யங்­களை அம்­ப­லப்­ப­டுத்தி வரு­வதன் மூலம் கடும் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அமெ­ரிக்க தேசிய பாது­காப்புச் சேவை ஜேர்­மனி மற்றும் பிரான்ஸ் உள்­ள­டங்­க­லான நாடு­களை உளவு பார்த்­த­தாக விக்­கிலீக்ஸ் ஏற்­க­னவே தக­வல்­களை வெளி­யிட்டு பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஜப்­பா­னிய பிர­தமர் ஷின்ஸோ அபேயை அமெ­ரிக்கா உளவு பார்த்­த­தாக அந்த ஆவ­ணத்தில் குறிப்­பிட்டுக் கூறப்­ப­ட­வில்லை என்ற போதும், வாணிப அமைச்சர் யொய்சி மிய­ஸவா மற்றும் ஜப்­பா­னிய மத்­திய வங்­கியின் ஆளுநர் ஹறுஹிகோ குரோடா உள்­ள­டங்­க­லாக அவ­ரது அர­சாங்­கத்தைச் சேர்ந்த ஏனைய சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை அமெ­ரிக்கப் புல­னாய்வு பிரிவு உளவு பார்த்­த­தாக அதில் தெரி­விக்­கப்­பட்­டுள் ளது.

2006 ஆம் ஆண்டு ஷின்ஸோ அபே முதன்­ மு­த­லாக பதவி­யேற்­றது முதற் கொண்டு மேற்­படி உளவு பார்க்கும் செயற்­பாட்டில் அமெ­ரிக்கா ஈடு­பட்­ட­தாக விக்­கிலீக்ஸ் தெரி­விக்­கி­றது. அவர் 2012 ஆம் ஆண்டு மீண்டும் அதி­கா­ரத்தை பொறுப்­பேற்­றி­ருந் தார்.

அமெ­ரிக்­காவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலான முக்கிய நட்பு நாடாக ஜப்பான் விளங்கி வருகின்ற நிலையில், விக்கிலீக்ஸால் வெளி யிடப்பட்ட இந்தத் தகவல் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
 
உளவு பார்ப்பதில் அமெ­ரிக்கா,,, Reviewed by Author on August 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.